பொன்னேரி; பொன்னேரி, திருஆயர்பாடி சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவில், 1,500 ஆண்டுகள் பழமையானது. பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அகத்தீஸ்வரர் சுவாமிகளும், கரிகிருஷ்ண பெருமாளும், அரிஅரன் பஜார் சாலையில் உள்ள பரத்வாஜ முனிவர் சன்னிதி முன் சந்திக்கும் சந்திப்பு பெருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவிற்கான கொடியேற்றம், இன்று காலை விமரிசையாக நடந்தது. காலை 6:30 மணிக்கு பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, வாணவேடிக்கைகள் மற்றும் சிறப்பு பூஜைகளுடன் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. கரிகிருஷ்ண பெருமாள், சவுந்தர்யவள்ளி தாயாருக்கு சிறப்பு தீபாரானைகள் நடந்தன. அதை தொடர்ந்து, காலை 8:00 மணிக்கு தங்கமுலாம் தொட்டி உற்சவம் நடைபெற்றது. கொடியேற்றம் மற்றும் தங்க முலாம் தொட்டி உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, கரிகிருஷ்ண பெருமாளை வழிபட்டனர். உற்சவ பெருமான் தொட்டி உற்சவத்தில், மாடவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.