பதிவு செய்த நாள்
14
ஏப்
2025
03:04
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை, முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகும். இங்குள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில், தமிழ் புத்தாண்டு பெயர்களான பிரபவ முதல் அட்சய வரையிலான 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் 60 படிக்கட்டுக்களாக அமைந்துள்ளன. இக்கோவிலில், ஆண்டுதோறும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று, 60 படிகளுக்கு, பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு காலை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, 60 தமிழ் ஆண்டு பெயர் கொண்ட 60 படிக்கட்டுகளிலும், பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மேளதாளம் முழங்க படிப்பூஜை நடத்தினர். பிறகு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமிதரிசனம் செய்தனர்.