ஏப்ரல் 24ம் தேதியை ஸ்ரீ சத்ய சாய் பாபா நூற்றாண்டு தினமாக அறிவித்துள்ளது நியூயார்க் நகரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2025 11:04
நியூயார்க்; ஏப்ரல் 24, 2025 அன்று ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நியூயார்க் நகரம் ஒரு பிரகடனத்தை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 22, 2025 அன்று சிட்டி ஹாலில் நடைபெற்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க விழாவில், நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் மனிதகுலத்திற்கு தன்னலமற்ற சேவையை கௌரவிக்கும் வகையில், நாளை ஏப்ரல் 24, 2025 (வியாழக்கிழமை) ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு விழா தினமாக அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
மேயர் அலுவலக பிரதிநிதிகள் மற்றும் ஸ்ரீ சத்ய சாய் குளோபல் கவுன்சில் உறுப்பினர்கள் முன்னிலையில் துணை ஆணையர் திலீப் சவுகான் இந்த பிரகடனத்தை வழங்கினார். விழாவின் ஒரு பகுதியாக, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.ஜே. ரத்னாகரின் எழுத்துப்பூர்வ அறிக்கை, குளோபல் கவுன்சில் உறுப்பினர்களின் கருத்துகளுடன் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும், ஸ்ரீ சத்ய சாய் ஊடக மையமான பிரசாந்தி நிலையத்தால் தயாரிக்கப்பட்ட சிறப்பு ஆவணப்படமும் திரையிடப்பட்டது. இந்தப் படம் பகவானின் உலகளாவிய முயற்சிகளையும், உலகம் முழுவதும் உள்ள அவரது பக்தர்களின் பணிகளையும் காட்சிப்படுத்தியது.
உணவு வழங்குதல் மற்றும் சுகாதாரப் பெட்டிகளை விநியோகித்தல் முதல் இளைஞர்களுக்கு கல்வி கற்பித்தல் வரை அமெரிக்காவில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் தன்னார்வலர்களின் அயராத முயற்சிகளை இந்த பிரகடனம் எடுத்துக்காட்டுகிறது மற்றும் பாராட்டுகிறது. ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ சத்ய சாய் குளோபல் கவுன்சிலின் தொலைநோக்குத் தலைமையையும் மேயர் பாராட்டினார், இதில் ஆர்.ஜே. ரத்னாகர், நிமிஷ் பாண்டியா, சுந்தர் சுவாமிநாதன், கல்யாண் ரே, டாக்டர் ஆக்ஸய் கலாதியா, டாக்டர் பாலு கரணம், டாக்டர் கீதா ஜே காமத், திருமதி. கீதா மோகன் ராம், பேராசிரியர் கோட்டேஸ்வர ராவ் மற்றும் சுந்தர் வேணுகோபாலன் ஆகியோர் அடங்குவர். சுவாமியின் நித்திய செய்தியை உள்ளடக்கிய ஒவ்வொரு அர்ப்பணிப்புள்ள தன்னார்வலரும் கடமை அனைவரையும் நேசி, அனைவருக்கும் சேவை செய் எப்போதும் உதவு, ஒருபோதும் காயப்படுத்தாதே" என்பதாகும். உலகின் மிகவும் துடிப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட நகரங்களில் ஒன்றான நியூயார்க் நகரத்திலிருந்து இந்த அங்கீகாரம், உலகளாவிய ஒற்றுமை, சேவை மற்றும் ஆன்மீக நல்லிணக்கம் பற்றிய பகவானின் பார்வையை எதிரொலிக்கிறது.