மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா பந்தல் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2025 04:04
காரைக்கால்; காரைக்கால் ஸ்ரீ அம்பகரத்தூர் பகுதியில் மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் அம்பகரத்தூர் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் தினம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.செவ்வாய் வெள்ளி உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு இன்று பந்த கால் முகூர்த்தம் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக பூஜிக்கப்பட்ட புனித நீரை மற்றும் அபிஷேக பொருட்கள் வந்த காலுக்கு சிறப்பு பூஜை செய்தனர். மேலும் வரும் ஐந்தாம் தேதி திங்கட்கிழமை பூச்செறிதல். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா 19ம் தேதி நடைபெறுகிறது.இருபதாம் தேதி மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது விழாக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர். இதில் கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.