பாண்டுரங்கன் அலங்காரத்தில் சரநாராயண பெருமாள் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2012 11:12
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் பாண்டுரங்கன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பண்ருட்டி திருவதிகை ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று (13ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூபம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை, மூலவர் சரநாராயண பெருமாள் பண்டரிபுரம் பாண்டுரங்கன் அலங்காரத்தில் ராஜஸ்தான் உடையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து 9 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்து, 9.30 மணிக்கு பெருமாள் உள்புறப்பாடும், திருக்கண்ணாடி அறையில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 12.30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜையும், இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், தலைமை அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார் செய்து வருகின்றனர்.