திருநெல்வேலி: தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோவிலில் 21வது உழவாரப்பணி 16ம் தேதி நடக்கிறது.பக்தர் பேரவை சார்பில் கோவிலில் ஒவ்வொரு ஆங்கில மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி நடக்கிறது. 16ம் தேதி காலை 8 மணி முதல் 12 மணி வரை உழவாரப்பணி நடக்கவுள்ளது. உழவாரப்பணி குழுவினர் கோவில் வளாகத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.
வேள்வி துவக்கம்: கோவிலில் விரைவில் மகா கும்பாபிஷேக விழா நடக்க ஓம் நமோ நாராயணா திரு நாமத்தை ஒரு கோடி முறை எழுதும் வேள்வி நேற்று துவங்கியது. இப்பணியில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என பக்தர் பேரவையினர் அறிவுறுத்தினர்.