Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேஷம்: குருபெயர்ச்சி பலன் 2025 – 2026  மிதுனம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026 மிதுனம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (11.5.2025 முதல் 26.5.2026 வரை)
ரிஷபம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026
எழுத்தின் அளவு:
ரிஷபம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026

பதிவு செய்த நாள்

09 மே
2025
01:05

கார்த்திகை.. நல்ல நேரம் வந்தாச்சு; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு, மே 11 முதல் 3ம் வீட்டில் சஞ்சரித்து முயற்சியில் தடை,  வாழ்க்கையில் நெருக்கடி, தனித்து நிற்க வேண்டிய நிலையை உண்டாக்குவார் குருபகவான். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டில் குடும்ப குருவாக சஞ்சரித்து பண வரவையும், குடும்பத்தில் முன்னேற்றத்தையும், தொழில், வேலையில் ஏற்றத்தையும் தருவார்.

பார்வைகளின் பலன்
குருவின் சஞ்சார நிலையை விட அவர் பார்க்கும் இடங்கள் பலம் பெறும் என்பது பொது விதி. 1 ம் பாதத்தினருக்கு, குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் உங்களுடைய நீண்டநாள் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொந்த வீடு, வாகனம் அமையும், வருமானம் அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 6,8,10 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் நோய்கள் தீரும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு இல்லாமல் போகும், வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும், மனதில் இருந்த பயம் விலகும். தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.

சனி சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை லாப சனியால் வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மார்ச்6 முதல் விரயச் சனியால் வரவை விட செலவு அதிகரிக்கும். கடன் தொல்லையால் மனம் பாதிக்கும். மருத்துவச் செலவு உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பத்தாமிட சனியால் தொழிலில் தடைகள் ஏற்படும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும் நெருக்கடியும் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் தொட்டதெல்லாம் பொன்னாகும். வேலையில் நிம்மதி ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

ராகு, கேது சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு லாப ராகுவால், பல வழிகளிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பொருளாதார நிலை உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகு 10ல், கேது 4 ல் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். வேலையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, செப்.17 – அக்.17, 2026, ஜன.15 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு, ஜூலை17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026 பிப்.13 – ஏப்.13 காலங்களிலும் தன் 3,6,10,11ம் இட சஞ்சாரங்களால் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையை முன்னேற்றுவார். வழக்கை சாதகமாக்குவார். தொழிலில் லாபத்தையும் பணியில்  முன்னேற்றத்தையும் உண்டாக்குவார். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களை தகுதியான இடத்தில் அமர வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வழியமைப்பார். வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சியை அதிகரிப்பார்.

செவ்வாய் சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு, ஜூலை 30 – செப்.14, 2026, பிப்.21 – ஏப்.1 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன்8, செப்.14 – அக். 27, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும், தன் 3,6,11 ம் இட சஞ்சாரங்களால், எடுத்த வேலைகளை முடிக்க வைப்பார். எண்ணியதை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். ஆற்றலை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தை அதிகரிப்பார். வீடு, நிலம் வாங்க வைப்பார்.

பொதுப்பலன்
குருபகவான் சஞ்சாரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் அவரால் இக்காலத்தில் பலன்கள் வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் அவருடைய பார்வைகளால் பலன் கிடைக்கும். ராகு, சனி, சூரியன், செவ்வாய் என்று இக்காலத்தில் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர்.  நீண்டநாள் கனவுகளை நனவாக்குவர்.

தொழில்
தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.
கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ஏற்றுமதி இறக்குமதி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ஹார்டுவேர்ஸ் தொழில்கள், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றம் பெறும். 

பணியாளர்கள்
வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த சலுகை, ஊதியம் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். பார்த்து வரும் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் சிலருக்கு ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்
இதுவரை இருந்த போராட்டங்கள் விலகும். உடல் பாதிப்புகள் நீங்கும். கல்வி, திருமணம், வேலை போன்ற கனவுகள் நனவாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு கூடும். பொன், பொருள் சேரும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடப்பிரிவில், விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை
இக்காலத்தில் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம், விபத்து, அல்சர், சுவாச பிரச்னை, அஜீரணக்கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை என ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனாலும் அவற்றில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

குடும்பம்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலை, வருமானம், தொழில் என்ற நிலைகளால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.  பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் கூடும்.

பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

ரோகிணி..அதிர்ஷ்ட காலம்; சந்திரனை நட்சத்திர அதிபதியாகவும், சுக்கிரனை ராசிநாதனாகவும் கொண்ட நீங்கள், எந்த ஒன்றிலும் முன்னேற்றத்தை நோக்கியே செயல்படக் கூடியவர்கள். உங்களுக்கு லாபாதிபதியான குருபகவான், மே11 முதல் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
இதனால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். பணவரவு அதிகரிக்கும். நினைப்பதை நினைத்தபடி செய்து முடிக்க முடியும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். உங்கள் வார்த்தைகளை மற்றவர்கள் கேட்கும் நிலை உருவாகும்.

பார்வைகளின் பலன்
குருபகவான் 2,5,7,9,11ம் இடங்களில் சஞ்சரிக்கும் போது ஜாதகருக்கு யோகப்பலன்களை வழங்குவார். ஆனாலும், எங்கு சஞ்சரித்தாலும் தன் 5,7,9 ம் பார்வைகளால் ஜாதகருக்கு யோகத்தை வழங்குவார் என்பது பொது விதி, மிதுன குருவின் பார்வைகள் உங்கள் ராசிக்கு 6, 8, 10 ம் இடங்களுக்கு உண்டாவதால் தொழில் முன்னேற்றம் பெறும். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்னைகளும், மறைமுக எதிர்ப்புகளும் இருந்த இடம் தெரியாமல் போகும். நோய்நொடிகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும், மனதில் இருந்த பயம் விலகும். தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேலை தேடி வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும்.

சனி சஞ்சாரம் 
2026 மார்ச்6 வரை ஜீவன ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியால், வேலைப்பளு அதிகரிக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு தள்ளிப் போகும். சிலருக்கு மெமோ, வழக்கு என்ற நிலை உண்டாகும். செய்து வரும் தொழிலில் தடைகளும் முன்னேற்றமில்லாத நிலையும் ஏற்படும். மார்ச்6 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாகும். வேலையில் நிம்மதி ஏற்படும். தடைபட்ட பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அரசியல்வாதிகளின் நிலை உயரும்.

ராகு, கேது சஞ்சாரம் 
10ல் ராகு, 4ல் கேது சஞ்சரிப்பதால், தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். அதே நேரத்தில் கடின உழைப்பும், உடல்நிலையில் சின்னச் சின்ன பிரச்னைகள் தோன்றி சந்தோஷத்திற்கு தடை போடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
ஜூலை 17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026 பிப்.13 – ஏப்.13 காலங்களில் தன் 3,6,10,11 ம் இட சஞ்சாரங்களால் எடுக்கும் வேலைகளை வெற்றியாக்குவார். செல்வாக்கை அதிகரிப்பார். எதிரிகளை பலமிழக்கச் செய்வார். ஆரோக்கியத்தை மேம்படுத்துவார். இழுபறியாக இருந்த வழக்கை சாதகமாக்குவார். தொழிலில் லாபம், வேலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலைக்காக முயற்சிப்பவர்களை தகுதியான இடத்தில் அமர வைப்பார். அரசு வழி முயற்சிகளை வெற்றியாக்குவார்.

செவ்வாய் சஞ்சாரம்
ஏப்.14 – ஜூன்8, செப்.14 – அக்.27, 2026 ஏப்.1 – மே 26 காலங்களில் தன் 3,6,11 ம் இட சஞ்சாரங்களால் தைரியத்தை அதிகரிப்பார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்புகளை இல்லாமல் செய்வார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தை அதிகரிப்பார்.

பொதுப்பலன் 
குருபகவான் இரண்டாமிடத்தில் சஞ்சரித்தாலும், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் அவரால் இக்காலத்தில் பலன்கள் வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ. 18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் அவருடைய பார்வைகளால் பலன் கிடைக்கும். சனி, சூரியன், செவ்வாய் என மூவரும் இக்காலத்தில் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். யோகப் பலன்களை வழங்குவர்.

தொழில்
தொழில் முன்னேற்றம் பெறும். லாபாதிபதி தன, குடும்ப, ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலர் தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேளாண்துறை வளர்ச்சி அடையும். கலைஞர்கள், வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாகன உற்பத்தி, ஸ்பேர் பார்ட்ஸ், இண்டஸ்ட்ரீஸ், ஹார்டுவேர், கம்ப்யூட்டர், அழகு சாதனம், மின்சாதனம் தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ், ஸ்டேஷனரி, ஜூவல்லரி, சினிமா, டிவி, பங்கு வர்த்தகம் வளர்ச்சி அடையும்.

பணியாளர்கள்
பணிபுரியும் இடத்தில் அனுபவித்த நெருக்கடி, தொல்லைகள் இல்லாமல் போகும். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த சலுகைகளும் ஊதியமும் கிடைக்கும். உங்கள் திறமையை அறிந்து வேறு நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் ஏற்பட்ட வழக்குகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள் 
இக்காலம் யோக காலமாகும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்களுக்கு நிம்மதியை அளிப்பார். உங்கள் வார்த்தைக்கு குடும்பத்தில் மதிப்புண்டாகும். உடல் பாதிப்புகள் நீங்கும். கல்வி, திருமணம், வேலை என்ற கனவுகள் நனவாகும். பணிபுரியும் இடத்தில் முக்கிய பொறுப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். சிலர் சுயமாக தொழில் தொடங்கி லாபம் காண்பர். பொன், பொருள் சேரும். உறவுகளுடன் சுமூகமான நிலை ஏற்படும்.

கல்வி 
வாக்கு ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். நீங்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர முடியும்.

உடல்நிலை 
நீண்ட நாளாக தொந்தரவு செய்த நோய்கள் மருத்துவத்தால் குணமாகும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். 

குடும்பம்
குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் சொந்தம் கொண்டாடுவர். இக்காலம் உங்களுக்கு யோக காலமாக அமையும். பொன் பொருள், வீடு, மனை, வாகனம் என வாங்கி மகிழ்வீர்கள். வேலையின் காரணமாக பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்: திருப்பதி ஏழுமலையானை வழிபட வாழ்வில் வளம் கூடும்.

மிருகசீரிடம்.. தொட்டது துலங்கும்: தைரிய, வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ம் பாதமான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசி நாதனாகவும், 3,4ம் பாதங்களான மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு புதன் ராசி நாதனாகவும் உள்ளனர்.

மிருகசீரிடம் 1, 2 ம் பாதத்தினருக்கு மே11 முதல் 2ம் வீட்டில் சஞ்சரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையையும்,  செயலில் வேகத்தையும், எதிர்பார்த்த வரவையும்,  முயற்சியில் வெற்றியையும், வேலையில் முன்னேற்றத்தையும்,  வாழ்வில் யோகத்தையும் உண்டாக்க இருக்கிறார் குருபகவான். 3,4ம் பாதத்தினருக்கு ஜென்ம குருவாக சஞ்சரித்து  குடும்பத்தை விட்டு வெளியூர் சென்று வசிக்கும் நிலையையும்,  மனதில் குழப்பத்தையும் உண்டாக்குவார் குருபகவான்.

பார்வைகளின் பலன்
குரு சஞ்சரிக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களை பலப்படுத்துவார் என்பது பொது விதி. 1,2 ம் பாதத்தினருக்கு, 6,8,10ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், இதுவரை இருந்த மந்தநிலை மாறும். மனதில் இருந்த பயம் போகும். உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்தி வந்த நோய் நொடிகள் விலகும், தொழில், வேலையில் இருந்த எதிர்ப்பு, மறைமுகத் தொல்லைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். 3, 4ம் பாதத்தினருக்கு, 5,7,9 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் குடும்பத்தில் இருந்த குழப்பம், விவகாரம், ரத்த உறவுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள், சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிய வீடு என்ற கனவு நனவாகும். 

சனி சஞ்சாரம்
1, 2 ம் பாதத்தினருக்கு 2026 வரை ஜீவன  ஸ்தான சனியால்  வேலையில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடும். நெருக்கடி அதிகரிக்கும். செய்யாத தவறுக்கு பதில் சொல்லும் நிலை உண்டாகும். செய்து வரும் தொழிலில் தடைகள் இருக்கும். முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். மார்ச் 6 முதல் சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். 3, 4ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். நினைத்த செயல்கள் நடந்தேறும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். வம்பு, வழக்குகள் முடிவிற்கு வரும். உடல்நிலை சீராகும். வருமானம் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் பத்தாமிட சனியால் வேலை, தொழிலில் பிரச்னைகள், வருமானக்குறைவு, போராட்டம், முன்னேற்றமில்லாத நிலை ஏற்படும்.

ராகு, கேது சஞ்சாரம்
1, 2 ம் பாதத்தினருக்கு ராகு 10லும், கேது 4 லும் சஞ்சரிப்பதால் முயற்சிகள் வெற்றியாகும். உழைப்பிற்கேற்ப வருமானம் வரும். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு முன் சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவது அவசியம். வேலைப்பளு கூடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். 3, 4ம் பாதத்தினருக்கு ராகு 9ல், கேது 3ல் சஞ்சரிப்பதால் தெய்வ அருள் கிடைக்கும். நீண்ட நாளாக தள்ளிப்போன வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும்.

சூரிய சஞ்சாரம்
1, 2 ம் பாதத்தினருக்கு ஜூலை17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026 பிப்.13 – ஏப்.13 காலங்களிலும், 3, 4ம் பாதத்தினருக்கு ஏப்.14 – மே14, ஆக.17 – செப்.16, நவ.11 – டிச.15, 2026 மார்ச்15 – ஏப்.13 காலங்களிலும் தன் 3,6,10,11ம் இட சஞ்சாரத்தால் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையை சீராக்குவார். வழக்குகளை சாதகமாக்குவார். தொழிலில் லாபம், பணியில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்க வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றியாக்குவார்.

செவ்வாய் சஞ்சாரம்
1, 2ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன்8, செப்.14 – அக்.27, 2026 ஏப்.1 – மே 26 காலங்களிலும், 3, 4 ம் பாதத்தினருக்கு ஜூன் 8 – ஜூலை 30, அக்.27 – டிச.6 காலங்களிலும் தன் 3,6,11ம் இட சஞ்சாரங்களால் ஜெயத்தை உண்டாக்குவார்.  தடைபட்ட வேலைகளை நடத்தி வைப்பார். எடுத்த வேலைகளை முடித்து வைப்பார். ஆரோக்கியத்தையும் ஆற்றலையும் அதிகரிப்பார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவை உண்டாக்குவார். செல்வாக்கோடு வாழ வைப்பார்.

பொதுப்பலன் 
குரு பகவான் சஞ்சாரத்தில் ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் இக்காலத்தில் அவர் வழங்க வேண்டிய பலன்களை வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் 3, 4 ம் பாதத்தினருக்கு யோகப் பலன்களை வழங்குவார். 1, 2 ம் பாதத்தினருக்கு பார்வைகளால் பலன் கிடைக்கும். சூரியனும், செவ்வாயும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பர். 

தொழில் 
செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், மருத்துவம், கெமிக்கல், பெட்ரோல், உணவகம், நிதி, இண்டஸ்ட்ரீஸ், பங்கு வர்த்தகம், ஆன்லைன் வர்த்தகம், வேளாண்மை லாபம் அடையும்.

பணியாளர்கள் 
அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.

பெண்கள்
குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி, பிரச்னைகள் விலகும். செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் சந்தித்த போராட்டங்கள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். சுய தொழில் செய்பவருக்கு முன்னேற்றம் உண்டாகும். கணவருடன் இணக்கம் உண்டாகும். இளம் பெண்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

கல்வி 
குரு பார்வைகள் சாதகமாக இருப்பதால் படிப்பில் ஆர்வம் கூடும். பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். போட்டித் தேர்விலும் வெற்றி உண்டாகும். விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை
உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்கள் வீடு திரும்புவர். பரம்பரை நோய், தொற்று நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.

குடும்பம்
குடும்பத்தில் தோன்றிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து செயல்படுவர். பிள்ளைகளுக்கு திருமணம், குழந்தைப்பேறு என சந்தோஷம் அதிகரிக்கும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சொத்து சுகம், வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.

பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட வாழ்வில் வளம் பெருகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (11.5.2025 முதல் 26.5.2026 வரை) »
temple news
அசுவினி; குருபார்வையால் நன்மை.. செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்து நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்.. தொட்டது துலங்கும்: தைரிய, வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ... மேலும்
 
temple news
புனர்பூசம்.. யோக காலம்: ஞானக் காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான ... மேலும்
 
temple news
மகம்.. நினைப்பது நடந்தேறும்; ஞான மோட்சக்காரகன் கேது பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஆத்ம காரகன் சூரியனை ... மேலும்
 
temple news
உத்திரம்.. செல்வாக்கு உயரும்; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar