Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம் : குருபெயர்ச்சி பலன் 2024 – 2025 ரிஷபம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026 ரிஷபம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (11.5.2025 முதல் 26.5.2026 வரை)
மேஷம்: குருபெயர்ச்சி பலன் 2025 – 2026
எழுத்தின் அளவு:
மேஷம்: குருபெயர்ச்சி பலன் 2025 – 2026

பதிவு செய்த நாள்

09 மே
2025
01:05

அசுவினி; குருபார்வையால் நன்மை.. செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்து நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, மே 11 முதல் உங்கள் ராசிக்கு 3ம் இடமான மிதுனத்தில் சஞ்சரிக்கிறார். ஜூன் 6ல் மிதுனத்தில் அஸ்தமனம் அடைந்து ஜூலை 6ல் உதயம் ஆகிறார். அக்.8ல் அதிசாரமாக கடகத்திற்கு செல்பவர் நவ.18ல் கடகத்தில் வக்ரமாகி, வக்ர கதியிலேயே டிச.21ல் மிதுனத்திற்கு வந்து 2026, மார்ச் 17ல் வக்ர நிவர்த்தியடைபவர், மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

கிரகங்களில் குரு பகவான் வக்ரமடையும்போது அவர் முன்பிருந்த ராசியின் பலன்களையே ஜாதகருக்கு வழங்குபவர் என்பதால், கடகத்திற்கு அதிசாரமாக செல்லும் 40 நாட்களில் வக்ரமடைவதால் அதன்பிறகு 3 ம் இடத்தின் பலன்களையே வழங்குவார். இக்காலத்தில் ஒவ்வொரு வேலைக்கும் அதிகபட்ச முயற்சி மேற்கோள்ள வேண்டியதாக இருக்கும். வருமானத்திலும் பின்னடைவு ஏற்படும். வேலைப்பளு கூடும்.

பார்வை பலன்
குரு சஞ்சாரம் எதிர்மறையாக இருந்தாலும், குரு பார்வை இக்காலத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களை உண்டாக்கும். குரு பார்க்க கோடி புண்ணியம் என்ற வார்த்தையை இக்காலத்தில் உணர்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொத்து, சுகம் என்ற நிலை உண்டாகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் நடந்தேறும். நெருக்கடிகள் விலகும்.

சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை, லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் தொழில் முன்னேற்றம் அடையும். வருமானம் உயரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மார்ச் 6 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் செலவு அதிகரிக்கும். வருவாயில் தடை உண்டாகும். உடல்பாதிப்பும் மருத்துவச் செலவும் ஏற்படும்.

ராகு, கேது சஞ்சாரம்
லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் வருமானம் உயரும்.  தொழிலில் லாபம் அடையும். புதிய சொத்து சேரும். பணப்புழக்கம் இருக்கும் என்றாலும், 5ம் இட கேதுவால் உறவுகளுடன் பகை, பிள்ளைகளால் நெருக்கடி, பூர்வீக சொத்தில் பிரச்னை என்ற நிலை உண்டாகும்.

சூரிய சஞ்சாரம்
ஜூன் 15 – ஜூலை 16, செப்.17 – அக்.17, 2026, ஜன.15 – மார்ச் 14 காலங்களில் சூரியன் 3,6,10,11ம் இடங்களில் சஞ்சரிப்பதால் தடைபட்ட வேலைகள் நடந்தேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். உடல்நிலை சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். தொழில் முன்னேற்றம் பெறும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். அரசு வழி வேலைகள் சாதகமாகும். வருமானம் உயரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும்.

செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 30 – செப்.14, 2026, பிப்.21 – ஏப்.1 காலங்களில் செவ்வாய் 6,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகம் இருக்கும். எடுத்த வேலைகளை முடிக்க முடியும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட போட்டி, எதிர்ப்பு விலகும். எதிரிகள் உங்களிடம் சரண் அடைவர். வருமானம் அதிகரிக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

பொதுப்பலன்
குருவின் பார்வைகள், லாப ஸ்தான ராகு, சூரியன் 120 நாட்கள், செவ்வாய் 85 நாட்கள் உங்கள் நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். தொழில், குடும்பம், வேலை என்று அனைத்திலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர். எடுத்த வேலைகளை வெற்றியாக்குவர். செல்வாக்கை உயர்த்துவர்.

தொழில்
தொழிலில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். சிலர் வெளியூரிலும் தங்கள் வியாபாரத்தை விரிவு செய்வர். போட்டியாளர்கள் பலம் இழப்பர். வாடகை, லீஸ் இடங்களில் தொழில் செய்தவர்கள் அந்த இடத்தை சொந்தமாக வாங்கும் அளவிற்கு முன்னேறுவர்.

பணியாளர்கள்
கடந்த கால நெருக்கடிகள் விலகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த பொறுப்பும், சலுகைகளும் கிடைக்கும். பணியாளர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

பெண்கள்
குருபார்வையால் நீண்டநாள் கனவு நனவாகும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடக்கும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்னை இல்லாமல் போகும். வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். எந்த ஒன்றிலும் தனித்து நின்று சாதிக்க முடியும். கணவரின் ஆதரவு பலம் தரும்.

கல்வி
படிப்பில் ஏற்பட்ட தடைகள் விலகும். ஆசிரியர்கள் ஆலோசனை நன்மை தரும். மேற்படிப்பிற்காக மேற்கோள்ளும் முயற்சி வெற்றியாகும். சிலர் வெளிநாட்டிற்கு செல்வர்.  

உடல்நிலை
2026 மார்ச் 6 வரை சனியின் பார்வை உங்கள் ராசியிலும், அஷ்டம ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். ஒன்றுவிட்டு ஒன்று என ஏதாவது பாதிப்பு உண்டாகும். மருத்துவச் செலவு ஏற்படும்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த பிரச்னை, நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். தம்பதிகளுக்குள் இணக்கம் உண்டாகும். வீடு, வாகனம்  வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.

பரிகாரம்; கற்பக விநாயகரை வழிபட நினைத்த வேலைகள் நடந்தேறும்.

பரணி: தொழிலில் முன்னேற்றம்..; செவ்வாயை ராசி அதிபதியாகவும், சுக்கிரனை நட்சத்திர அதிபதியாகவும் கொண்ட உங்களுக்கு, மறைவு ஸ்தானமான 3ம் இடத்தில் மே11 முதல் மங்கள காரகனான குரு பகவான் சஞ்சரித்து 2026 மே 26ல் கடகத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

மிதுனத்தில் சஞ்சரிக்கும் குரு, அஸ்தமனம், அதிசாரம், வக்ரம் என்ற நிலைக்கு ஆளாவதால் அவர் வழங்கும் பலன்களில் மாற்றங்கள் இருக்கும். ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அவர் அஸ்தமனம் ஆவதால் சஞ்சாரப் பலனையே அவரால் வழங்க முடியாமல் போகும். அக். 8 முதல் நவ. 18 வரை கடகத்தில் நேர்கதியில் சஞ்சரிப்பதால் அந்த 40 நாட்களும் அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களை வழங்குவார்.

மிதுன ராசியில் சஞ்சரிக்கும் குரு, பார்த்து வரும் வேலையில் போராட்டம், செய்து வரும் தொழிலில் நெருக்கடி, நட்பு வட்டத்தில் விரிசல், உறவுகளுடன் பகை, வருமானத்தில் தடை என்ற நிலைகளை உண்டாக்குவார். கடக குரு, உழைப்பை அதிகரிப்பார், வருமானத்திற்காக அலைச்சலை ஏற்படுத்துவார். உடல்நிலையில் பாதிப்பை உண்டாக்குவார்.

பார்வைகளின் பலன்
குரு சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இல்லை என்றாலும், அவருடைய பார்வைகள் உங்களை நிமிர வைக்கும். நினைத்ததை சாதிக்க வைக்கும். செய்து வரும் தொழிலை வளர்ச்சியாக்கும்.  உடல்நிலையை சீராக்கும். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். கூட்டுத் தொழிலில் லாபம் காண வைக்கும். திருமண வயதினரை மணமேடை ஏற வைக்கும். பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பை அளிக்கும். விவசாயிகளுக்கு நன்மையை உண்டாக்கும். சொத்து, சுகம், வசதி, வாய்ப்பு என்று வாழ வைக்கும்.

சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை சனி பகவான் லாப ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிப்பதால் முடங்கிக் கிடந்த தொழில் முன்னேற்றம் பெறும். மூடி வைத்த தொழிற் கூடங்கள் இயங்க ஆரம்பிக்கும். வருமானம் உயரும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். மார்ச் 6 முதல் விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால் அதுவரை இருந்த நிம்மதியான நிலை மாறும். வரவை விட செலவு அதிகரிக்கும். நேரத்திற்கு உணவு, உறக்கம் என்பது இல்லாமல் போகும். பிறரைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் வீடு, வாகனம், நவீன பொருளுக்காக கடன்படுவீர்கள். அதை அடைப்பதற்காக நிறைய சிரமப் படுவீர்கள். உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படும். மருத்துவச் செலவு உண்டாகும். வருமானத்தில் தடை ஏற்படும். 

ராகு, கேது சஞ்சாரம்
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எல்லா நிலையிலும் உங்களைப் பாதுகாப்பார். உங்கள் ஆசைகளை நிறைவேற்றுவார். செலவிற்கேற்ற வருமானத்தை வழங்கி சந்தோஷமாக வாழ வைப்பார். தொழில், வியாபாரத்தை முன்னேற்றுவார். சொத்து, சுகம் என மகிழ்ச்சிப் படுத்துவார். ஆனாலும் 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குவார். பிள்ளைகளால் சங்கடத்தை ஏற்படுத்துவார். மனதில் காதலை உண்டாக்குவார். பூர்வீக சொத்தில் வம்பு, வழக்கு என்ற நிலையை ஏற்படுத்துவார்.

சூரிய சஞ்சாரம்
ஜூன் 15 – ஜூலை 16, செப்.17 – அக்.17, 2026, ஜன.15 – மார்ச் 14 காலங்களில் சூரியன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால், இக்காலங்கள் உங்களுக்கு யோக காலமாகும். மற்றவரால் முடியாத வேலைகளையும் நீங்கள் செய்து முடிப்பீர்கள். எந்த வித பிரச்னைகள் எதிர் வந்தாலும் அவற்றையெல்லாம் இல்லாமல் செய்வீர்கள். செல்வாக்கு உயரும். உடல்நிலை சீராகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வருமானம் உயரும்.

செவ்வாய் சஞ்சாரம்
ஜூலை 30 – செப்.14, 2026, பிப்.21 – ஏப்.1 காலங்களில் 6,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர்கள். எடுத்த வேலைகளை முடித்து விட்டுதான் அடுத்த வேலையில் ஈடுபடுவீர்கள். அந்த அளவிற்கு உங்களிடம் ஆற்றல் இருக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். தொழிலில் வருமானம் அதிகரிக்கும். வங்கியில் கேட்ட கடன் கிடைக்கும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும்.

பொதுப்பலன்
உங்கள் வாழ்க்கையில் இக்காலம் யோகமான காலமாகும். நீண்டநாள் கனவு நனவாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். குடும்பம், தொழில், வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். கலைஞர்களுக்கு புதிய பாதை தெரியும். முயற்சிக்கேற்ற ஆதாயம் உண்டாகும்.

தொழில்
தொழில் மீது அக்கறை அதிகரிக்கும். நவீன இயந்திரங்கள் வாங்குவீர்கள். பணியாளர்களும் உதவியாக இருப்பர். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். தொழிற்கூடங்கள், வாகன உற்பத்தி விற்பனை, ஸ்பேர் பார்ட்ஸ், டிரான்ஸ்போர்ட், டிராவல்ஸ், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம், சின்னத்திரை துறையினர் வளர்ச்சி காண்பர். 

பணியாளர்கள்
ராகு, சனி சாதகமாக சஞ்சரிப்பதால் உழைப்பாளர்களின் நிலை உயரும். சிலருக்கு பெரிய நிறுவனங்களின் வாய்ப்பு கதவைத் தட்டும். திறமைக்கு மரியாதை உண்டாகும். புதிய பொறுப்பும், சலுகைகளும் கிடைக்கும்.  பணியாளர்களுக்கு மெமோ, வழக்கு என்ற நிலைகள் முடிவிற்கு வரும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட இடைவெளி விலகும். வேலையின் காரணமாக பிரிந்தவர்கள் இப்போது ஒன்று சேர்வர். உடல்நிலை சீராகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். குடும்பத்தினரின் ஆதரவு கூடும். படிப்பு, வேலை என்ற கனவு நனவாகும்.

கல்வி
திறமை வெளிப்படும். தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைத்து முதல் இடத்திற்கு வருவீர்கள். உயர் கல்விக் கனவு நனவாகும். சிலர் மேற்கல்விக்காக கடல் கடந்து வெளிநாட்டுக்குச் செல்வர். 

உடல்நிலை
இக்காலத்தில்  உடல்நிலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சிலர் விபத்தையும் சந்திக்க  நேரும் என்பதால் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம். உணவிலும் கட்டுப்பாடு அவசியம்.

குடும்பம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவுகள் ஆச்சரியப்படும் வகையில் முன்னேறுவீர்கள். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர். சிலர், வசிக்கும் வீட்டை உங்கள் வசதிக்கேற்ப புதுப்பிப்பர். தம்பதிக்குள் புரிதல் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். 

பரிகாரம்: துர்கையை வழிபட நன்மை பன்மடங்கு அதிகரிக்கும். 

கார்த்திகை.. நல்ல நேரம் வந்தாச்சு; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான மேஷத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும், 2,3,4 ம் பாதங்களான ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர்.

கார்த்திகை 1ம் பாதத்தினருக்கு, மே 11 முதல் 3ம் வீட்டில் சஞ்சரித்து முயற்சியில் தடை,  வாழ்க்கையில் நெருக்கடி, தனித்து நிற்க வேண்டிய நிலையை உண்டாக்குவார் குருபகவான். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2ம் வீட்டில் குடும்ப குருவாக சஞ்சரித்து பண வரவையும், குடும்பத்தில் முன்னேற்றத்தையும், தொழில், வேலையில் ஏற்றத்தையும் தருவார்.

பார்வைகளின் பலன்
குருவின் சஞ்சார நிலையை விட அவர் பார்க்கும் இடங்கள் பலம் பெறும் என்பது பொது விதி. 1 ம் பாதத்தினருக்கு, குருவின் பார்வை 7,9,11 ம் இடங்களுக்கு உண்டாவதால் உங்களுடைய நீண்டநாள் கனவுகள் நனவாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். சொந்த வீடு, வாகனம் அமையும், வருமானம் அதிகரிக்கும். சங்கடங்கள் விலகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு, 6,8,10 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால் நோய்கள் தீரும். உடல்நிலை சீராகும், எதிர்ப்பு இல்லாமல் போகும், வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும், மனதில் இருந்த பயம் விலகும். தொழில் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.

சனி சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை லாப சனியால் வருமானம் அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். மார்ச்6 முதல் விரயச் சனியால் வரவை விட செலவு அதிகரிக்கும். கடன் தொல்லையால் மனம் பாதிக்கும். மருத்துவச் செலவு உண்டாகும். 2,3,4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை பத்தாமிட சனியால் தொழிலில் தடைகள் ஏற்படும். பணியாளர்களுக்கு வேலைப்பளுவும் நெருக்கடியும் அதிகரிக்கும். மார்ச் 6 முதல் தொட்டதெல்லாம் பொன்னாகும். வேலையில் நிம்மதி ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

ராகு, கேது சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு லாப ராகுவால், பல வழிகளிலும் வருமானம் வர ஆரம்பிக்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். பொருளாதார நிலை உயரும். 2,3,4 ம் பாதத்தினருக்கு ராகு 10ல், கேது 4 ல் சஞ்சரிப்பதால் உழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீட்டிற்கேற்ற லாபம் இல்லாமல் போகும். வேலையில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
1ம் பாதத்தினருக்கு, ஜூன் 15 – ஜூலை 16, செப்.17 – அக்.17, 2026, ஜன.15 – மார்ச் 14 காலங்களிலும், 2,3,4ம் பாதத்தினருக்கு, ஜூலை17 – ஆக.16, அக்.18 – நவ.16, 2026 பிப்.13 – ஏப்.13 காலங்களிலும் தன் 3,6,10,11ம் இட சஞ்சாரங்களால் முயற்சிகளை வெற்றியாக்குவார். உடல்நிலையை முன்னேற்றுவார். வழக்கை சாதகமாக்குவார். தொழிலில் லாபத்தையும் பணியில்  முன்னேற்றத்தையும் உண்டாக்குவார். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களை தகுதியான இடத்தில் அமர வைப்பார். புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு வழியமைப்பார். வாழ்வில் நிம்மதி, மகிழ்ச்சியை அதிகரிப்பார்.

செவ்வாய் சஞ்சாரம்
1 ம் பாதத்தினருக்கு, ஜூலை 30 – செப்.14, 2026, பிப்.21 – ஏப்.1 காலங்களிலும், 2,3,4 ம் பாதத்தினருக்கு, ஏப்.14 – ஜூன்8, செப்.14 – அக். 27, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும், தன் 3,6,11 ம் இட சஞ்சாரங்களால், எடுத்த வேலைகளை முடிக்க வைப்பார். எண்ணியதை நடத்தி வைப்பார். ஆரோக்கியத்தை அதிகரிப்பார். ஆற்றலை உண்டாக்குவார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். வருமானத்தை அதிகரிப்பார். வீடு, நிலம் வாங்க வைப்பார்.

பொதுப்பலன்
குருபகவான் சஞ்சாரத்தில், ஜூன் 6 முதல் ஜூலை 6 வரை அஸ்தமனம் அடைவதால் அவரால் இக்காலத்தில் பலன்கள் வழங்க முடியாமல் போகும். அக்.8 முதல் நவ.18 வரை கடகத்தில் உச்சமடையும் காலத்தில் அவருடைய பார்வைகளால் பலன் கிடைக்கும். ராகு, சனி, சூரியன், செவ்வாய் என்று இக்காலத்தில் உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவர்.  நீண்டநாள் கனவுகளை நனவாக்குவர்.

தொழில்
தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும்.
கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். அரசுவழி முயற்சிகள் சாதகமாகும். ஏற்றுமதி இறக்குமதி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், ஹார்டுவேர்ஸ் தொழில்கள், ஆன்லைன் வர்த்தகம் முன்னேற்றம் பெறும். 

பணியாளர்கள்
வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த சலுகை, ஊதியம் கிடைக்கும். சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். பார்த்து வரும் வேலையை விட்டு விட்டு வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் சிலருக்கு ஏற்படும். அரசு பணியாளர்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள்
இதுவரை இருந்த போராட்டங்கள் விலகும். உடல் பாதிப்புகள் நீங்கும். கல்வி, திருமணம், வேலை போன்ற கனவுகள் நனவாகும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு கூடும். பொன், பொருள் சேரும்.

கல்வி
பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். விரும்பிய பாடப்பிரிவில், விரும்பிய கல்லுாரியில் இடம் கிடைக்கும்.

உடல்நிலை
இக்காலத்தில் உடல்நிலையில் கவனமாக இருப்பது அவசியம், விபத்து, அல்சர், சுவாச பிரச்னை, அஜீரணக்கோளாறு, ரத்த அழுத்தம், சர்க்கரை என ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனாலும் அவற்றில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

குடும்பம்
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வேலை, வருமானம், தொழில் என்ற நிலைகளால் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெறும். சிலர் புதிய வீட்டில் குடியேறுவர்.  பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் கூடும்.

பரிகாரம்: அதிகாலையில் சூரிய பகவானை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (11.5.2025 முதல் 26.5.2026 வரை) »
temple news
கார்த்திகை.. நல்ல நேரம் வந்தாச்சு; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்.. தொட்டது துலங்கும்: தைரிய, வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ... மேலும்
 
temple news
புனர்பூசம்.. யோக காலம்: ஞானக் காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான ... மேலும்
 
temple news
மகம்.. நினைப்பது நடந்தேறும்; ஞான மோட்சக்காரகன் கேது பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஆத்ம காரகன் சூரியனை ... மேலும்
 
temple news
உத்திரம்.. செல்வாக்கு உயரும்; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் பாதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar