Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மகரம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026 மீனம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026 மீனம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026
முதல் பக்கம் » குரு பெயர்ச்சி பலன்கள் (11.5.2025 முதல் 26.5.2026 வரை)
கும்பம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026
எழுத்தின் அளவு:
கும்பம் : குருபெயர்ச்சி பலன் 2025 – 2026

பதிவு செய்த நாள்

09 மே
2025
02:05

அவிட்டம்.. குருபார்வையால் நன்மை!

தைரிய வீரிய பராக்கிரமக்காரனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாகக் கொண்டிருந்தாலும், 1, 2 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மகரம் ராசியாகும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கும்பம் ராசியாகும். இரண்டு ராசியினருக்கும் கர்மக் காரகனான சனி பகவானே ராசிநாதன் என்பதால், சனி, செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள்.  நீங்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திராத மாற்றம் வாழ்வில் ஏற்படும். திடீரென கற்பனைக்கு அப்பாற்பட்ட இடத்திலும் கோலோச்சுவீர்கள். திடீரென முற்றும் துறந்த நிலைக்கும் மாறி விடுவீர்கள். சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றவர்கள் கர்ம வினைகளுடன் பிறந்தவர்கள் என்பதால் காலத்தின் போக்கில் செல்லக் கூடியவர்களாக உங்களில் பலர் இருப்பர்.  1,2 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் குரு பகவான் சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து, எதிர்ப்புகளை அதிகரிப்பார். எங்கும் போட்டி எதிலும் பிரச்னை என்ற நிலையை உருவாக்குவார். நன்றாகப் பழகி வந்தவர்களும் விலகிச் செல்லக்கூடிய அளவிற்கு பகையை ஏற்படுத்துவார். உடல் பாதிப்புகளை அதிகரிப்பார். வம்பு, வழக்குகள் என சங்கடப்படுத்துவார். மனதில் நிம்மதி இல்லாத நிலையை உருவாக்குவார். 3, 4 ம் பாதத்தினருக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5 ம் இடத்தில் சஞ்சரிப்பவர், இதுவரை இருந்த நிலையில் மாற்றத்தை உண்டாக்குவார். மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். உங்களுக்கு லாபாதிபதியும், குடும்பாதிபதியுமான குருபகவான் 5 ம் இடத்தில் சஞ்சரிக்கும் இக்காலத்தில் திருமணம் நடந்தேறும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடக்கும். புதிய நட்பு உருவாகும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும். குழந்தைகளைப் பற்றிய சிந்தனை உண்டாகும். அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இதுவரை இருந்த கட்டுப்பாடுகள் இனி மாறும். கோயில் கோயிலாகச் சென்று வருவீர்கள். உங்கள் வாழ்வில் புதிய பாதை தெரியும். வருமானம் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முயற்சி வெற்றியாகும்.

பார்வைகளின் பலன் 
தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை குரு உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. இக்காலத்தில் 1,2 ம் பாதத்தினருக்கு, தன் 5,7,9 ம் பார்வைகளை 10, 12, 2 ம் இடங்களுக்கு வழங்குவதால், தொழில் முன்னேற்றம் பெறும்.  வேலைக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். விரயச் செலவு அதிகரிக்கும். புதிய இடம், வீடு, வாகனம் என வாங்குவதால் கையிருப்பு கரையும். நிம்மதியான உறக்கம், மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். 3, 4 ம் பாதத்தினருக்கு, 9, 11, உங்கள் ராசியை குரு பார்ப்பதால், தெய்வ அருள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும். நீண்டநாளாக எண்ணியிருந்த கோயில்களுக்கு செல்வீர்கள். தொழில், வியாபாரம் முன்னேற்றம் பெறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். முடங்கிய தொழில்களை மீண்டும் கையில் எடுப்பீர்கள். வரவு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு மணமாலை ஏறும். மனதில் இருந்த குழப்பம் விலகி தெளிவடைவீர்கள். 

சனி சஞ்சாரம் 
1,2 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை 2 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான், குடும்பத்திற்குள் குழப்பம், பண வரவில் தடை, வார்த்தைகளால் சங்கடத்தை ஏற்படுத்துவார் என்றாலும் மிதுன குருவின் பார்வையால் பாதிப்பு உங்களை நெருங்காமல் போகும். மார்ச் 6 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி முயற்சிகளை வெற்றியாக்குவார். மனதில் தைரியத்தை அதிகரிப்பார். உடல்நிலையில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். குடும்பத்தில் நிம்மதியை ஏற்படுத்துவார். 3, 4 ம் பாதத்தினருக்கு, ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பவர், எழ முடியாத அளவிற்கு உங்களைக் கட்டிப் போடுவார்.  நிம்மதியற்ற நிலையை உண்டாக்குவார். தொழிலை முடக்குவார். நண்பரிடம் இருந்து பிரிப்பார். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு வரலாம். மிதுன குருவின் பார்வையால் இவற்றில் எல்லாம் மாற்றம் ஏற்படும். 2026 மார்ச் 6 முதல் பாதச்சனியாக சஞ்சரிப்பவர் நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார்.

ராகு, கேது சஞ்சாரம் 
1, 2 ம் பாதத்தினருக்கு, ராகு 2 ம் இடத்தில் சஞ்சரிப்பதால், நெருக்கடி அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். வரவு, செலவில் நெருக்கடி ஏற்படும். கணவன், மனைவிக்குள் இடைவெளி ஏற்படும்.  ஆனாலும் மிதுன குருவின் பார்வை ராகுவிற்கு உண்டாவதால் பாதிப்பு குறையும். 8 ம் இட கேதுவால் குறுக்கு வழியில் மனம் செல்லும். அதனால் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.  நோய் நொடி வரலாம். வியாபாரம், தொழில், வேலையில்  பிரச்னை, அவமானம்,  வழக்குகள் ஏற்படும். 3, 4 ம் பாதத்தினருக்கு ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரிப்பார். சிலருக்கு அலைச்சலை ஏற்படுத்துவார். வருமானத்தை தேட வைப்பார். மிதுன குரு உங்கள் கவுரவத்தை பாதுகாப்பார். நல்லவர்களுடன் சேர வைப்பார். 7 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேது கணவன், மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்துவார். கூட்டுத்தொழிலில் பிளவை உண்டாக்குவார்.

சூரிய சஞ்சாரம் 
1,2 ம் பாதத்தினருக்கு, ஜூன் 16 – ஜூலை 16, அக். 18 – டிச. 15, 2026 மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, நவ. 17 – 2026 ஜன 14 காலங்களிலும் சூரியனின் சஞ்சாரம்  சாதகமாக இருப்பதால் அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். வழக்குகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி நிறைவேறும். கடல் கடந்து வேலைக்காக செல்லும் வாய்ப்பு வரும்.  நினைத்தது நடந்தேறும். உடல்நிலை சீராகும். வியாபாரம் முன்னேற்றம் பெறும். பணவரவு அதிகரிக்கும்.

செவ்வாய் சஞ்சாரம்
1,2 ம் பாதத்தினருக்கு, அக். 27 – டிச. 6, 2026 ஏப். 1 – மே 26 காலங்களிலும், 3,4 ம் பாதத்தினருக்கு, டிச. 6 – 2026 ஜன. 14 காலத்திலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். 

பொதுப்பலன்  
1,2 ம் பாதத்தினருக்கு, குரு பகவான் தன் பார்வைகளாலும், ஜூன் 6 முதல் ஜூலை 8 வரை அஸ்தமன காலத்திலும், அக். 8 முதல் நவ. 8 வரை கடகத்தில் சஞ்சரிக்கும் போதும் நன்மைகளை உண்டாக்குவார். 2026 மார்ச் 6 முதல் சனியும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். 3,4 ம் பாதத்தினருக்கு 5 ம் இட குருவும், அவருடைய பார்வைகளும் சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் யோகப்பலன்களை வழங்கும்.

தொழில் 
தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி வெற்றியாகும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேளாண்மை, ரியல் எஸ்டேட், மெடிக்கல், கெமிக்கல், உணவகம், ரசாயனம், ஆயில் ஸ்டோர், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், ஏற்றுமதி இறக்குமதி, ஆன்லைன் வர்த்தகம் லாபம் தரும்.

பணியாளர்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும். மேல் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். ஒரு சிலர் இருக்கும் வேலையை விட்டு விட்டு வேறு வேலைக்கு முயற்சிப்பதுடன் கடல் கடந்தும் வேலைக்காக செல்வீர்கள்.

பெண்கள் 
குருவின் பார்வைகள் சாதகமாக இருப்பதால் படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவு நனவாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கு மறுமணம் நடந்தேறும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் சேரும்.

கல்வி 
இக்காலத்தில் குருபார்வை சாதகமாக இருப்பதால் படிப்பில் அக்கறை அதிகரிக்கும். பொது,  போட்டித் தேர்விலும் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். ஒரு சிலர் படிப்பிற்காக கடல் கடந்தும் செல்வீர்கள்.

உடல்நிலை  
1,2 ம் பாதத்தினருக்கு, அஷ்டம கேதுவும், ஆறாமிட குருவும்  நோய்களை உண்டாக்குவர். வாகன விபத்து, தீ விபத்து என ஒரு சிலருக்கு ஏற்படும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். 3,4 ம் பாதத்தினருக்கு பாதிப்புகள் விலகும். ஆரோக்கியம் சீராகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள்.

குடும்பம்
குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தம்பதிகளுக்கு ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் மீது அக்கறை கூடும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்குவீர்கள். உறவினர் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

பரிகாரம்: திருச்செந்துார் முருகனை வழிபட சங்கடங்கள் நீங்கும்.

சதயம்.. நல்ல நேரம் வந்தாச்சு 

யோகக்காரகனான ராகுவை நட்சத்திர அதிபதியாகவும், ஆயுள் காரகனான சனியை ராசி நாதனாகவும் கொண்ட நீங்கள் எடுத்த வேலைகளை முடிப்பதில் சாமர்த்தியசாலிகள். பிறரால் செய்ய முடியாத காரியங்களை செய்து ஆதாயம் காண்பவர்கள். எப்போதும் செல்வாக்கோடு வாழ்ந்து வரும் உங்களுக்கு, மே11ல் நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சி மிகப் பெரிய யோகங்களை தரப் போகிறது. உங்கள் ராசிக்கு தனாதிபதியும், லாபாதிபதியுமான குரு பகவான்,  5ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலம் நீங்கள் நினைத்ததை சாதிக்கும் காலமாகும். உங்கள் செல்வாக்கு பன்மடங்கு உயரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பதவி, பொறுப்பு  தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வேலையில் இருந்த வழக்குகள் முடிவிற்கு வரும். தடைபட்டு வந்த பணி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். உடல் பாதிப்புகள் விலகும். சோர்வாக இருந்த உங்களுக்குள் சுறுசுறுப்பு அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றும் முடிவிற்கு வரும். தொழில் முன்னேற்றம் அடையும். கேட்ட இடத்தில் இருந்து கேட்ட உதவி கிடைக்கும். திருமண வயதில்  இருப்பவர்களுக்கு திருமணம் முடியும். இருப்பிடத்தை உங்கள் ரசனைக்கேற்ற விதத்தில் மாற்றியமைப்பீர்கள். வீட்டில் நவீன பொருட்களின் சேர்க்கை உண்டாகும். புனித தலங்களுக்கு செல்லும் பாக்கியம் சிலருக்கு உண்டாகும். புதிய வீடு, மனை வாங்குவீர்கள். அதற்கான உதவிகளும் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் ஏக்கம் தீரும். சிலருக்கு ஆண் குழந்தை பிறக்கும்.

பார்வைகளின் பலன் 
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி. இக்காலத்தில் 9 ம் வீடான பாக்ய ஸ்தானத்தையும், 11 ம் வீடான லாப ஸ்தானத்தையும் 9 ம் பார்வையால் உங்கள் ராசியையும் பார்ப்பதால், உங்கள் நிலையில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நீங்கள் பிறந்ததன் பலனை இக்காலத்தில் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். எதிர்பார்த்த புகழ், பெருமை உண்டாகும். எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். பொன், பொருள் சேரும். பொருளாதார நிலை உயரும். எதிர்பார்ப்பு இல்லாமல் செய்த செயல்களில் இப்போது லாபம் கிடைக்கும். வேலைகள் யாவும் நினைத்தபடியே நடக்கும். அரசாங்க உதவியும் ஆதரவும் உண்டாகும். விலகி இருந்த நண்பர்கள், உறவினர்கள் உங்களுடன் சேருவர். புதிய சொத்துகள் வாங்கும் நிலை உண்டாகும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். துணையை இழந்தவர்களுக்கு புதிய துணை அமையும். கருத்து வேறுபாட்டால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் இருந்த தடைகள் விலகும். தந்தை வழியில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். தந்தையின் உடல் நிலையில் ஆரோக்கியம் தோன்றும். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். சிலர் புதிய கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வீர்கள். வேலைக்காக முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசுப் பணிக்காக தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி உண்டாகும். பழைய பிரச்னைகள் எல்லாம் முடிவிற்கு வரும். வழக்குகளில் இருந்த இழுபறி நீங்கி வெற்றியுண்டாகும். திருமணத்தில் தடை விலகும். வாழ்க்கைத் துணையால் அந்தஸ்து உயரும். சொந்தமாக வீடு நிலம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

சனி சஞ்சாரம்
2026 மார்ச் 6 வரை ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் சோதனை, வேதனைகளையும் அதிகரிப்பார். வாழ்க்கைத் துணையுடன் பிரச்னைகளை உண்டாக்குவார். நட்புகளுடன் இணக்கமற்ற நிலை உண்டாகும். மிதுன குருவின் பார்வை இந்நிலைகளை மாற்றும். 2026 மார்ச் 6 முதல் பாதச்சனியாக சஞ்சரிப்பவர் இதுவரை இருந்த நெருக்கடியில் இருந்து உங்களை விடுவிப்பார். வசதி வாய்ப்புகளை அதிகரிப்பார்.

ராகு, கேது சஞ்சாரம்
இக்காலத்தில் ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு, வசதி வாய்ப்புகளைத் தேட வைப்பார். கிடைக்காத ஒவ்வொன்றின் மீதும் ஆசைகளை அதிகரிப்பார். சட்டத்திற்கு புறம்பான செயல்களிலும் ஈடுபட வைப்பார். ஒழுக்கம், பண்பாடு, நேர்மை என்பதற்கு எதிர்மறையாக செயல்பட வைப்பார் என்றாலும், மிதுன குரு உங்கள் கவுரவத்தை பாதுகாப்பார். 7 ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உங்களுக்குள் புதிய சிந்தனை உண்டாகும். குடும்பத்தில் நெருக்கடி அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் ஒற்றுமையில்லாத நிலை ஏற்படும். கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் அதிகரிக்கும். இருக்கும் இடத்தை விட்டு வெளியூர் செல்ல வேண்டிய நிலை  ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
ஜூலை 17 – ஆக. 16, நவ. 17 – 2026 ஜன 14 காலங்களில் சூரியனின் சஞ்சாரம்  சாதகமாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். பொருளாதார நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். அரசு வழி முயற்சி சாதகமாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகள் நடந்தேறும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும்.

செவ்வாய் சஞ்சாரம் 
டிச. 6 – 2026 ஜன.14 காலத்தில்  செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு உயரும்.

பொதுப்பலன்  
5 ம் இட குருவும், அவருடைய பார்வைகளும் சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் உங்களுக்கு யோகப் பலன்களை வழங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.

தொழில் 
குருவின் சஞ்சாரமும், பார்வைகளும் சாதகமாக இருப்பதால் தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகும். நஷ்டத்தில் இயங்கி நலிவடைந்த தொழில்கள் மீண்டும் வளர்ச்சி அடையும். லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், ரசாயனம், இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், ஆன்லைன் வர்த்தகம், ஜூவல்லரி, திரைப்படம், சின்னத்திரை, வேளாண்மை, வேளாண்மைச் சார்ந்த பொருட்கள், உணவு தானியம்,  உணவகம், கேட்டரிங், பிரிக்ஸ், எம் சாண்ட், மெடிக்கல் ஆகிய துறைகளில் லாபம் உண்டாகும்.

பணியாளர்கள்
ராசிக்கு குரு பார்வை உண்டாவதுடன், லாப ஸ்தானமும் பலப்படுவதால் பணியாளர்களுக்கு இதுவரை இருந்த நெருக்கடிகள் விலகும்.  நிர்வாகத்தின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த சலுகை, ஊதியம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். அரசு பணியாளர்களுக்கு இழுபறியாக இருந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.

பெண்கள் 
ராசிக்குள் சஞ்சரிக்கும் ராகு ஆசைகளை அதிகரித்தாலும், சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது வாழ்க்கைத் துணையுடன் இணக்கமற்ற நிலையை உண்டாக்கினாலும், குருப் பார்வை ராசிக்கு கிடைப்பதால் கவுரவ எண்ணத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். கணவருடன் இணக்கம் உண்டாகும். இளம் பெண்களுக்கு படிப்பு, வேலை, திருமணம் என்ற கனவுகள் நனவாகும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும் பிரிந்தவர்களுக்கும் மறுமணம் நடந்தேறும். குழந்தைப்பேறு கிடைக்கும்.  பொருளாதார நிலை உயரும். வேலையில் முன்னேற்றம் உண்டாகும்.

கல்வி 
ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவும், ராசிக்கு உண்டாகும் அவருடைய பார்வையும் படிப்பில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். பொது, போட்டித் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும். சிலர் படிப்பிற்காக வெளி மாநிலம், வெளிநாடு  செல்வீர்கள்.

உடல்நிலை
உடல்நிலை பாதிப்பு விலகும். பரம்பரை, தொற்று நோய்களால் உண்டான சங்கடங்கள் விலகும். ஆரோக்கியம் சீராகும்.

குடும்பம் 
ராசிக்கு குருபார்வை கிடைப்பதுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால்
குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தம்பதி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகளின் மீது அக்கறை கூடும். புதிய இடம், வீடு, வாகனம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சேமிப்பு உயரும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபட சங்கடம் நீங்கி நன்மை நடக்கும்.

பூரட்டாதி.. முயற்சி வெற்றி தரும்

ஞானக்காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு கர்மக்காரகனான சனி ராசிநாதனாகவும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு குருவே ராசிநாதனாகவும்  உள்ளார். 1,2,3 ம் பாதத்தினருக்கு மே 11 முதல் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்து, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலையையும், சுபிட்சத்தையும் உண்டாக்குவார். தொழிலில் முன்னேற்றம், எதிர்பார்த்த வருமானம், பொன் பொருள் சேர்க்கை, பிள்ளைகளால் பெருமையை உண்டாக்குவார். குழந்தைப்பேற்றை தருவார். படிப்பில் முன்னேற்றம், பட்டம், பதவி என பெருமை சேர்ப்பார். பூர்வீகச் சொத்தில் இருந்து பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். உறவினர் மத்தியில் செல்வாக்கை அதிகரிப்பார். இக்காலம் உங்களுக்கு மிகப் பெரிய யோக காலமாக அமையும். நினைப்பதெல்லாம் நடந்தேறும். கடந்த கால நெருக்கடி விலகும். 4 ம் பாதத்தினருக்கு, சுக ஸ்தானமான 4 ம் இடத்தில் சஞ்சரித்து தொழிலில் பின்னடைவை ஏற்படுத்துவார். வருமானத்தில் நெருக்கடியை உண்டாக்குவார். உழைப்பை அதிகரிப்பார். எடுக்கும் முயற்சிகளில் இழுபறியை ஏற்படுத்துவார். எந்த ஒன்றிலும் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே ஆதாயம் என்ற நிலைக்கு ஆளாக்குவார். பணியாளர்களுக்கு அலைச்சலை அதிகரிப்பார். உறங்குவதற்கு நேரமில்லை சாப்பிடுவதற்கு நேரமில்லை என்ற நிலையினை உண்டாக்குவார். உறவினருடன் இடைவெளியை ஏற்படுத்துவார். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இக்காலத்தில் மாறும். நன்றாக பழகி வந்தவர்களும் உங்களை விட்டு விலகிச் செல்லும் நிலை உண்டாகும்.

பார்வைகளின் பலன் 
குரு, தான் சஞ்சரிக்கும் இடத்தை விட, பார்க்கும் இடங்களுக்கு முன்னேற்றத்தை உண்டாக்குவார். அவருடைய பார்வைகள் எந்த இடத்திற்கு உண்டாகிறதோ அந்த பாவகம் சுபத்துவம் அடையும் என்பது பொது விதி, இக்காலத்தில், 1,2,3 ம் பாதத்தினருக்கு, தன் 5,7,9 ம் பார்வைகளை 9,11, மற்றும் ராசிக்கும் வழங்குவதால் நெருக்கடிகள் விலகும். செல்வாக்கு உயரும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி முடிவிற்கு வரும். நீண்ட நாள் கனவு நனவாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல்நிலை பாதிப்பு விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். பொன், பொருள் சேரும். 4 ம் பாதத்தினருக்கு, 8,10,12 ம் இடங்களுக்கு குருபார்வை உண்டாவதால், உடல் பாதிப்புகள் விலகும். உங்களுக்கு எதிராக சிலர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடையும். மறைந்திருந்த செல்வாக்கு வெளிப்படும்.  துணிச்சலாக செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் அடையும். பணியில் இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலைக்காக மேற்கொண்ட முயற்சிகள் நிறைவேறும். குடும்பத்தில் செலவு அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் கையிருப்பு கரையும். சிலர் செல்வாக்கை காட்ட நிறைய செலவு செய்வர். 

சனி சஞ்சாரம் 
1,2,3 ம் பாதத்தினருக்கு, 2026 மார்ச் 6 வரை ஜென்ம ராசிக்குள் சஞ்சரிப்பவர். குடும்பம், தொழில், பணியில் நெருக்கடியை அதிகரிப்பார். வருமானத்தில் தடை, முயற்சியில் இடையூறை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணையுடன் இடைவெளியை உண்டாக்குவார். நட்புகளுடன் பகையை ஏற்படுத்துவார். ஆனாலும் மிதுன குருவின் பார்வை இந்நிலைகளை மாற்றும். 2026 மார்ச் 6 முதல் பாதச்சனியாக சஞ்சரிப்பவர், ஐந்து ஆண்டாக நீங்கள் அனுபவித்து வந்த போராட்ட நிலைக்கு முடிவு கட்டுவார். நெருக்கடியில் இருந்து உங்களை விடுவிப்பார். வசதி வாய்ப்பை அதிகரிப்பார். 4 ம் பாதத்தினருக்கு 2026 மார்ச் 6 வரை விரய சனியாக சஞ்சரித்து செலவுகளை அதிகரிப்பார். எதிர்பாராத செலவுகளால்  திணறடிப்பார். ஆனாலும் மிதுன குருவின் பார்வையால்  ஓரளவு  நெருக்கடி நீங்கும். மனதில் இருந்த குழப்பம் விலகும். 2026 மார்ச் 6 முதல் ஜென்ம சனியாக சஞ்சரிப்பவர் உடல்நிலையில் சங்கடத்தை ஏற்படுத்துவார். வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் பிரச்னைகளை உண்டாக்குவார். புதிய நபர்களால் குடும்பத்திற்குள் குழப்பம் வரலாம். தொழில், வேலையில் அக்கறையை அதிகரிப்பார். 

ராகு, கேது சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு ராகு ஜென்ம ராசிக்குள், கேது 7 ல் சஞ்சரிப்பதால் மனதில் ஆசை அதிகரிக்கும். வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்காக சிலர் தவறான வழியில் செல்வர். தவறான நட்பிற்கு ஆளாவதுடன் அவர்களால் உங்கள் பெயரும் கெடும். சிலருக்கு சட்ட சிக்கல்கள் உண்டாகும். தகுதிக்கு கீழானவர்களின் நட்பு சிலருக்கு ஏற்படும். அதனால் வாழ்க்கைத் துணைக்கும் உங்களுக்கும் பிரச்னை உண்டாகும். 4ம் பாதத்தினருக்கு ராகு 12 ல், கேது 6 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த நெருக்கடி விலகும். நிம்மதியான உறக்கமும் சந்தோஷமும் ஏற்படும். நோய்கள் விலகும். எதிரி தொல்லை விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். வம்பு வழக்கில் சாதகம் ஏற்படும்.

சூரிய சஞ்சாரம்
1,2,3 ம் பாதத்தினருக்கு, ஜூலை 17 – ஆக. 16, நவ. 17 – 2026 ஜன 14 காலங்களிலும், 4 ம் பாதத்தினருக்கு, மே 15 – ஜூன் 14, ஆக. 17 – செப். 16, டிச. 16 – 2026 பிப். 12 காலங்களிலும் சூரியன் தன் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிப்பதால் முயற்சி வெற்றி பெறும். உடல்நிலை சீராகும். அரசு வழியில் ஆதாயம் வரும். தொழில் தொடங்கும் முயற்சியை வெற்றி பெறும்.  நினைத்தது நடக்கும். வியாபாரம், தொழிலில் ஆதாயம் ஏற்படும். பணப்புழக்கம் கூடும். 

செவ்வாய் சஞ்சாரம் 
1,2,3 ம் பாதத்தினருக்கு டிச. 6 – 2026  ஜன. 14 காலத்திலும், 4 ம் பாதத்தினருக்கு, ஜூன் 8 – ஜூலை 30, 2026 ஜன. 14 – பிப். 21 காலங்களிலும் செவ்வாயின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நினைத்த வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். செல்வாக்கு உயரும்.

பொதுப்பலன் 
1,2,3 ம் பாதத்தினருக்கு, 5 ம் இட குருவும், அவருடைய பார்வைகளும், 4 ம் பாதத்தினருக்கு, 6 ம் இட கேதுவும், குருவின் பார்வைகளும், 4 பாதத்தினருக்கும், சூரியன், செவ்வாய் சஞ்சார நிலைகளும் யோகப் பலனை வழங்கும். கனவு நனவாகும். விருப்பம் நிறைவேறும்.  குடும்பம், தொழில், வேலையில் முன்னேற்றம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.

தொழில்  
தொழிலில் இருந்த தடைகள் விலகும். முடங்கிய தொழில்கள் வளர்ச்சி பெறும். இயந்திரத் தொழில், வாகன உற்பத்தி, ஆட்டோ மொபைல்ஸ், ஸ்பேர் பார்ட்ஸ், பேக்டரி, டிராவல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எக்ஸ்போர்ட், பைனான்ஸ், ஆன்லைன் வர்த்தகம், ஜூவல்லரி, வேளாண் சார்ந்த பொருட்கள், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ் தொழில்கள் லாபம் அடையும்.

பணியாளர்கள் 
அரசு பணியாளர்களுக்கு நெருக்கடி விலகும். மேலதிகாரியின் ஆதரவு உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு  நெருக்கடி மறையும். நிர்வாகத்தினரிடம் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகை, ஊதிய உயர்வு கிடைக்கும்.

பெண்கள் 
குரு பகவானின் சஞ்சாரமும்  பார்வைகளும் சாதகமாக இருப்பதால் நினைப்பது நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணக் கனவுகள் நனவாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். கணவனை இழந்த, பிரிந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். குடும்பத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த நெருக்கடி மறையும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். 

கல்வி 
படிப்பில் இருந்த தடை விலகும். படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். ஆசியரியர்களின் ஆலோசனையை ஏற்பீர்கள். பொது, போட்டித் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்வி கனவு நனவாகும்.

உடல்நிலை  
உடல்நிலையில் ஏற்பட்ட சங்கடம் விலகும். தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தவர்களும் இக்காலத்தில் ஆரோக்கியமாக நடைபோடுவீர்கள்.

குடும்பம் 
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை, நெருக்கடி மறையும். தம்பதி ஒற்றுமை அதிகரிக்கும் பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். வீடு, வாகனம் என கனவுகள் நனவாகும். சமூக அந்தஸ்து உயரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.  சுபநிகழ்ச்சிகள்  நடந்தேறும்.

பரிகாரம்; ஆலங்குடி குருபகவானை அர்ச்சனை செய்ய நன்மை உண்டாகும்.

 
மேலும் குரு பெயர்ச்சி பலன்கள் (11.5.2025 முதல் 26.5.2026 வரை) »
temple news
அசுவினி; குருபார்வையால் நன்மை.. செவ்வாய், கேது அம்சத்தில் பிறந்து நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை.. நல்ல நேரம் வந்தாச்சு; ஆத்ம காரகனான சூரியனை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1ம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம்.. தொட்டது துலங்கும்: தைரிய, வீரிய காரகனான செவ்வாயை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும் 1,2 ... மேலும்
 
temple news
புனர்பூசம்.. யோக காலம்: ஞானக் காரகனான குருவை நட்சத்திர அதிபதியாக கொண்டிருந்தாலும், 1,2,3ம் பாதங்களான ... மேலும்
 
temple news
மகம்.. நினைப்பது நடந்தேறும்; ஞான மோட்சக்காரகன் கேது பகவானை நட்சத்திர அதிபதியாகவும், ஆத்ம காரகன் சூரியனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar