தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2025 01:05
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதின வளாகத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பெருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு ஞானபுரீஸ்வரர் கோவில் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன், எழுந்தருள தருமபுரம் ஆதினம் 27வது குருமகா சன்னிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு காலை 10:௦௦ மணி அளவில் ரிஷப கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
முக்கிய விழாவாக மே 15ம் தேதி திருக்கல்யாண உற்ஸவமும், 17ம் தேதி திருத்தேரோட்டமும், 18ம் தேதி தீர்த்தவாரி உற்ஸவமும் நடைபெறுகிறது. 18ம் தேதி ஆதி குருமுதல்வர் குருபூஜை விழாவும், 19ம் தேதி இரவு தருமபுரம் ஆதினம் 27வது குரு மகா சன்னிதானம் சிவிகை பல்லக்கில் எழுந்தருள பிரசித்தி பெற்ற பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.