Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை அனுஷம்; காஞ்சி மகா பெரியவர் ... கடும்பாடி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம் கடும்பாடி அம்மன் கோவில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு நிகழ்ச்சி; குடும்பம், குடும்பமாக பங்கேற்றனர்
எழுத்தின் அளவு:
சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு நிகழ்ச்சி;  குடும்பம், குடும்பமாக பங்கேற்றனர்

பதிவு செய்த நாள்

14 மே
2025
10:05

மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நிலாச்சோறு நிகழ்ச்சியில் அனைத்து மதங்களை சேர்ந்த ஏராளமானோர் வீடுகளில் சமைக்கப்பட்ட சைவ, அசைவ உணவு வகைகளை ஆற்றுக்குள் கொண்டு வந்து நிலவொளியில் சாப்பிட்டு மகிழ்ந்தனர்.


மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா கடந்த 12ம் தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நேற்று வைகை ஆற்றுக்குள் மானாமதுரை கிராமத்தார் மண்டகப்படியில் அழகர் பத்தி உலாத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த மண்டகப்படிக்கு மானாமதுரை பகுதி மக்கள் நிலாச்சோறு மண்டகப்படி என்றும் பெயர் வைத்து அழைத்து வருகின்றனர். நேற்று இரவு நடைபெற்ற நிலாச்சோறு நிகழ்ச்சியை முன்னிட்டு மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த அனைத்து மதங்களை சேர்ந்த ஏராளமானோர் சைவம் மற்றும் அசைவ உணவுகளான மட்டன்,சிக்கன்,மீன்,காடை,நண்டு, பிரியாணி உள்ளிட்டவற்றை வீட்டில் சமைத்துக் கொண்டு கார், வேன், லாரி மற்றும் டூவிலர்களில் மானாமதுரை வைகை ஆற்றுக்கு வந்து சித்ரா பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் வைகை ஆற்றுக்குள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.இந்த நிலாச்சோறு நிகழ்ச்சியில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஏராளமான முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தங்களது வீடுகளில் சமைத்த உணவுகளை வைகை ஆற்றுக்குள் கொண்டு வந்து உறவினர்களோடு சேர்ந்து சாப்பிட்டு வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar