கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் நடந்த வைணவ மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி திருவாய்மொழி திருச்சபை மற்றும் வைணவ கைங்கரிய டிரஸ்ட் சார்பில், 52 ஆம் ஆண்டு வைணவ மாநாடு நடத்தப்பட்டது. வாசவி பவனத்தில் நடந்த மாநாட்டிற்கு ஆசுகவி ஆராவமுதன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன், கஸ்தூரி இளையாழ்வார், குரூர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் வைணவ நெறிமுறைகளை கடைபிடிப்பதன் அவசியம், அதன் முக்கிய சாராம்சங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. கல்கி நாராயணன் நன்றி கூறினார்.