Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரவி எடுப்பு திருவிழா தருமபுரம் ஆதீனத்தில் தங்க பாத குறடுடன், வெள்ளி பல்லக்கில் குருமகா சன்னிதானம் தருமபுரம் ஆதீனத்தில் தங்க பாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 45ம் நாள் மண்டல பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் 45ம் நாள் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

19 மே
2025
10:05

உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஏப்.,4ல் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஏப்., 29, 30 ஆகிய இரு நாட்களில் அரைமண்டலமாக கருதப்பட்டு சிறப்பு மண்டல பூஜை நடந்தது.


அதனைத் தொடர்ந்து 45 நாட்கள் நிறைவை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு மங்களநாதர் சுவாமி கோயில் வடக்கு பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உற்ஸவ மூர்த்திகளான மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு யாக வேள்வி வளர்க்கப்பட்டது. குடங்களில் புனித நீர் பூஜிக்கப்பட்டு மூலவர்கள் மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மன், சகஸ்ரலிங்கம், மரகத நடராஜர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார தீபாரதனைகள் நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை கோயில் ஸ்தானிக குருக்கள் செய்திருந்தனர். ராமநாதபுரம் சேதுபதி ராணி ராஜராஜேஸ்வரி நாச்சியார் மற்றும் திவான் பழனிவேல் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான சிவனடியார்களும், பொதுமக்களும் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar