பதிவு செய்த நாள்
20
மே
2025
11:05
கோவை; கோவையின் முதல் மந்திராலயம் என்று அழைக்கப்படும் அபய ப்ரத ஆஞ்சநேயர், ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக 16ம் தேதி கணபதி பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்சகவ்யம், வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, ஆகியன நடைபெற்றது. அதை தொடர்ந்து இரண்டாம் நாள் சுப்ரபாதம், விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கங்கா பூஜை, யாகசாலை பூஜை, வேத பாராயணம், அக்னி மதனம் , நவகிரக மற்றும் சுதர்சன ஹோமம் ஆகியன நடைபெற்றது. மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கலச பூஜை, ராகவேந்திரர் மூல மந்திர ஹோமங்கள், வேத பாராயணம் ஆகியன நடைபெற்றன. திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு கோவை மாதவ ஆச்சார்யர்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ பலிமாரு மடாதிபதி 1008 வித்யா தீஷ தீர்த்த சுவாமிகள் மூலவருக்கு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராகவேந்தர் மற்றும் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.