கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவிலில் கவர்னர் ரவி சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2025 10:05
தேவகோட்டை; தேவகோட்டை அருகே ராமாயண புராணத்தோடு கலந்த கண்டதேவிக்கு தமிழக கவர்னர் ஆர் என் ரவி நேற்று மாலை வந்தார். இங்குள்ள சிறகிழிநாதர் என்ற சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலுக்கு வந்த கவர்னரை தலைமை குருக்கள் தாஸ் தலைமையில் கோயில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பூர்ண கும்ப மரியாதை யுடன் வரவேற்றனர். கோயிலுக்குள் சொர்ணமூர்தீஸ்வரர், பெரியநாயகி அம்மனையும் மற்றும் சுவாமிகளையும் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நீண்ட நாட்கள் ஓடாமல் இருந்து கடந்தாண்டு ஓடிய முக்கியமானதான தேரை பார்வையிட்டார். தேரை தொட்டு வணங்கினார். நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சிவகங்கை சமஸ்தான நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக நான்கு நாட்டைச் சேர்ந்தவர்கள். கிராமத்தினர் சால்வைகள் அணிவித்து வரவேற்றனர்.