போகர் சித்தருக்கு குரு பூஜை; சிறப்பு அபிஷேகம், அஷ்டோத்திர வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27மே 2025 11:05
புதுச்சேரி; புதுச்சேரி போகர் சித்தருக்கு குரு பூஜை நடந்தது. புதுச்சேரி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஐய்யனாரப்பன் கோவில் வளாகத்தில் போகர் சித்தருக்கு குரு பூஜை நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, காலை 10:30 மணிக்கு போகர் சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அஷ்டோத்திர வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.