புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் மகா மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மே 2025 11:05
திட்டக்குடி; புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு அமாவாசை சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில், மகா மாரியம்மனுக்கு அமாவாசையையொட்டி நேற்று முன்தினம் காலை மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பிரகாரத்தில் உள்ள மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.