Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மும்மூர்த்திகளும் வழிபட்ட ... கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
எழுத்தின் அளவு:
நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்

பதிவு செய்த நாள்

09 ஜூன்
2025
11:06

சிவகங்கை; நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.


சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 31 மாலை 6:00 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. ஜூன்.,1ம் தேதி காலை 10:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 7 மாலை 6:00 மணிக்கு கோயில் உட்பிரகாரத்தில் அம்மன் தங்க ரதத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். ஜூன் 8 மாலை 6:10 மணிக்கு வெள்ளி ரதத்தில் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். தொடர்ந்து இன்று ஜூன் 9ம் தேதி காலை தேரில் கண்ணுடைய நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 9:25 மணிக்கு தேரோட்டம் துவங்கி, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது. நாளை ஜூன் 10ல் காலை பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். ஜூன் 11ல் ஊஞ்சல் உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும். ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் கணபதிராமன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar