அச்சன்கோவிலில் மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2012 11:12
தென்காசி: அச்சன் கோவில் ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. செங்கோட்டையை அடுத்துள்ள அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல மகோற்சவ விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு மகோற்சவ விழா நேற்று துவங்கியது.காலையில் சன்னிதி முன் அமைந்துள்ள கொடிமரத்திற்கு அபிஷேக வழிபாடு நடந்தது. தொடர்ந்து கொடி மரத்தில் கொடிபட்டம் ஏற்றப்பட்டு தீபாராதனை நடந்தது. கோயில் மூலவர் சுவாமி ஐயப்பனுக்கு நறுமணப்பொருட்களால் மகாபிஷேகம், திரு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு காலை, மாலை அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சுவாமி வீதியுலா வந்தார். 24ம் தேதி காலையில் தேரோட்டமும், 25ம் தேதி ஆராட்டு விழாவும், ஒவ்வொரு நாளும் கருப்பன் பேட்டை துள்ளல் நிகழ்ச்சியும் நடக்கிறது. 26ம் தேதி மண்டல மகோற்சவ விழா நிறைவு பூஜை வழிபாடு நடக்கிறது.