பண்ருட்டி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூன் 2025 05:06
பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கனகவள்ளி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஆனி மாத திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு இன்று காலை உற்சவர் பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, பெருமாள், தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.