ஸ்ரீ ஶ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி சுவாமி கோவை வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஜூன் 2025 07:06
கோவை; ஆதி சங்கராச்சார்ய சாரதா லட்சுமி ந்ருஸிம்ஹ பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி சுவாமி நேற்று கோவை வந்தார்.
ஆதி சங்கராச்சார்ய சாரதா லட்சுமி ந்ருஸிம்ஹ பீட ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி சுவாமியின் ஜென்ம தினம் வரும், 22 ஆகும். இதனையொட்டி, ராம் நகரிலுள்ள ஐயப்பா பூஜா சங்கத்தில் ஜென்ம தின வைபவம் நேற்று மாலை துவங்கியது. இதனையொட்டி அங்கு வருகை புரிந்த சுவாமிகளுக்கு பூரண கும்ப மரியாதையுடன். மடத்தின் கோவை கிளை தர்மாதிகாரி விஸ்வநாதன் தலைமையில் ஜென்ம தின வைபவ கமிட்டி நிர்வாகிகள், பக்தர்கள் வரவேற்பளித்தனர். தொடர்ந்து சுவாமிகள் முன் பாத பூஜை நடந்தது. இதனையடுத்து சுவாமிகள் நிர்வாகிகளுக்கு ஆசி வழங்கினார். இதன் தொடர்ச்சியாக கலைமாமணிகள் லலிதா, நந்தினி ஆகியோரின் வயலின் இசை கச்சேரி நடந்தது. முடிவில் சுவாமிகள் ஸ்ரீசக்ர நவாவர்ண பூஜையை நடத்தினார். திரளானோர் பங்கேற்று சுவாமிகளிடம் அருளாசி பெற்றுச் சென்றனர். இன்று காலை, 8:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் விசேஷ திருமஞ்சனம் சங்கல்ப சேவை, கொங்கு மண்டல நாம சங்கீர்த்தன குழுவினர் அகண்ட நாம சங்கீர்த்தனம், மதியம் மாப்பிள்ளை அழைப்பு, ஊஞ்சல் சேவை, மாலை மாற்றுதல், மாலை, 3:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 5:00 மணிக்கு சுவாமிகள் பக்தர்களுடன் நகர்வலம், இரவு, 7:30 மணிக்கு ஸ்ரீ சக்ர நவாவர்ண பூஜை ஆகியவை நடக்கின்றன.