பதிவு செய்த நாள்
18
டிச
2012
11:12
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் ஐயப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர் ஐயப்பன் கோவி லில் மண்டல பூஜை விழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு தென்பெண்ணை நதிக்கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா, 9 மணிக்கு கலசத்துடன் ஐயப்ப பக்தர்கள் வீதியுலா வந்தனர்.முற்பகல் 11 மணிக்கு கலச பூஜைகள், ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ துர்கா ஹோமம், ஸ்ரீ சாஸ்தா ஹோமம், விசேஷ திரவ்யாகுதி, பூர்ணாகுதி, ஐயப்பனுக்கு மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம், சோடசோபசார தீபாராதனை நடந்தது.சுந்தரமூர்த்தி, பரணி குருக்கள் தலைமையில் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.மாலை 3 மணிக்கு வீரட்டானேஸ்வரர் கோவிலில் இருந்து ஐயப்பனுக்கு திருவாபரணம் புறப்பட்டு கோவிலை அடைந்தது. இரவு 7 மணிக்கு சிறப்பு ராஜ அலங்காரத்துடன் ஐயப்பன் எழுந்தருளினார்.விழாவிற்கான ஏற்பாடுகளை கீழையூர் ஐயப்ப பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.