Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் ... மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா துவக்கம் மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2025
03:06

தேவகோட்டை; கண்டதேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது.


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தானத்தின் சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆனித் திருவிழா மாம்பழத் திருவிழாவாக நடைபெறும். இக்கோயில் தேரோட்டத்தில் வடம் பிடித்து இழுப்பது, புதுத் தேர் வெள்ளோட்டம் என சில காரணங்களால் அவ்வப்போது ஆனித் திருவிழா நடைபெறவில்லை. சில ஆண்டுகள் திருவிழா நடந்தது. தேருக்கு பதில் சப்பரபவனி நடந்தது. இந்நிலையில் இந்தாண்டு ஆனித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சிவன் படம் வரையப்பட்ட திருவிழாக் கொடி மேளதாளத்துடன் கோயில் மற்றும் ஊருணி உட்பட தேரோடும் வீதியில் வலம் வந்தது . கோயிலில் கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலையில் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. திருமூலநாதன் சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகள் செய்தார். சமஸ்தானத்தின் கோயில் கண்காணிப்பாளர் சரவணன் உட்பட நான்கு நாட்டைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். டி.எஸ். பி. கவுதம் , இன்ஸ்பெக்டர் சரவணன், தாசில்தார் சேதுநம்பு, பங்கேற்றனர். முதல் நாளான இன்று கேடக வாகனத்திலும் மற்ற நாட்களில் சிறப்பு வாகனங்களில் சொர்ண மூர்த்தீஸ்வரர், பெரியநாயகி அம்மன் உட்பட பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருவர். ஐந்தாம் நாள் திருக்கல்யாணம், ஒன்பதாம் நாள் ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் சொர்ண மூர்த்தீஸ்வரர் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடைபெற உள்ளது. தேரோட்டத்தை சிறப்பாக நடத்துவது பற்றியும், மரியாதை தொடர்பாகவும் நான்கு நாட்டைச் சேர்ந்த மக்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தேரோட்டத்தை முன்னிட்டு தேவகோட்டை மற்றும் கண்டதேவிக்குள் வரும் வழிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar