ருத்ரபிரயாகையில் வெள்ளப்பெருக்கு; நீரில் மூழ்கிய 15 அடி உயர சிவன் சிலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2025 01:07
ருத்ரபிரயாக்: அலக்நந்தா நதியின் நீர்மட்டம் உயர்ந்து, ருத்ரபிரயாகையில் உள்ள சிறிய கோயில்களும் சிவன் சிலையுமே நீரில் மூழ்கின.
உத்தரகண்டின் மலை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் சார்தாம் யாத்திரையை கடுமையாக பாதித்துள்ளது. ருத்ரபிரயாக்கில் அலக்நந்தா நதி 20 மீட்டருக்கும் அதிகமாக பெருக்கெடுத்துள்ளது, மலைத்தொடர்கள், நடைபாதைகள் மற்றும் பெல்னி பாலத்தின் கீழ் 15 அடி உயர சிவன் சிலை கூட நீரில் மூழ்கியுள்ளது. நதிக்கரைகளுக்குச் செல்வதற்கு அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கையை விடுத்ததை அடுத்து, அருகிலுள்ள குடியிருப்பாளர்கள், பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையிடன் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் நெடுஞ்சாலைகளில், குறிப்பாக சிரோபாக் மற்றும் முன்கட்டியாவில் பல நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையேயான ஷட்டில், அடிக்கடி இடிபாடுகள் விழுவதால் யாத்ரீகர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.