அவிநாசி தாலுகா, வஞ்சிபாளையம் ஆர்.எஸ்., முருகம்பாளையத்தில், எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் ஆகஸ்ட் 28ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று கோவில் வளாகத்தில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் சிவக்குமார் தலைமையில் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் திருப்பணி குழுவினர்,விழா கமிட்டியினர் உள்ளிட்டோர் முன்னிலையில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான முகூர்த்த ஆயக்கால் நடும் விழா நடைபெற்றது. பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்,சிரவையாதினம் தவத்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள், அவிநாசி திருப்புகொளியூர் ஆதீனம் ஸ்ரீ காமாட்சி தாசசுவாமிகள், கூனம்பட்டி திருமடம் சிவஸ்ரீ நடராஜ சுவாமிகள், பெங்களூரூ வாழும் கலை குருகுல வேத ஆகம பாடசாலை முதல்வர் அவிநாசி ஸ்ரீசிவாகம சுந்தரமூர்த்தி சிவம் ஆகியோர் தலைமையில் மஹா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்திற்காக ஆகஸ்ட் 26ம் தேதி முதல் கால பூஜைகளுடன்,கும்பாபிஷேக வேள்வி யாக சாலையில் 7 கால பூஜைகள் நடைபெறுகிறது. அதில் காலை 6.45 மணிக்கு கிழக்கு பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம், 7.45 மணிக்கு எல்லை பிள்ளையார் என அழைக்கப்படும் அற்புத பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து காலை 9:15 மணிக்கு மேற்கு பிள்ளையார் கோபுரம் ஸ்ரீ மாகாளியம்மன் கோபுரம் கும்பாபிஷேகம், 9:45 மணிக்கு ஸ்ரீ விநாயகப் பெருமான் கும்பாபிஷேகம் மற்றும் காலை 10 மணிக்கு ஸ்ரீ மாகாளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.