திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2025 02:07
திருமழிசை; திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோத்சவ தேரோட்டம் இன்று நடந்தது.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இங்கு இந்த ஆண்டு ஆனிப்பிரம்மோத்சவ திருவிழா கடந்த 4 ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பிரம்மோத்சவ திருநாளில் தினமும் காலை, மாலை 7:00 மணியளவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று நடந்தது. இன்று காலை 7:50 மணிக்கு ஜெகந்நாத பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 8:00 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதிகளில் வலம் வந்து பகல் 11:00 மணிக்கு தேர் கோவிலை வந்தடைந்தது. மாடவீதிகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடப்பதால், சாலை மிகவும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் பேரூராட்சி அதிகாரிகள் கேட்டு கொண்டதற்கிணங்க பெரிய தேருக்கு பதில் சிறிய தேரில் தேரோட்டம் நடந்தது. சிறியதேரும் ஒத்தாண்டேஸ்வரர் கோவில் தேராகும். தேரோட்டம் நடைபெறும் வகையில் சாலையை சீரமைக்காத பேரூராட்சி நிர்வாகம் மீது பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.