காரைக்காலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை நினைவு கூறுவகையில் மாங்கனித்திருவிழா நடக்கிறது. இந்தாண்டு கடந்த 8ம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. நேற்று காரைக்கால் அம்மையார்,பரமதத்தர் திருகல்யாணம் உற்சவம் நடந்தது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று சிவபெருமாள் |பிச்சாண்டவ மூர்த்தியாக வீதி உலாவில் பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. வல்துறை சார்பில் மாங்கனி வீசும் பகுதிகளில் காண்காணிப்பு கேமராக வாகனம் இயக்கப்பட்டது. மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதுகாப்பு குறித்து கடந்த இருதினங்களாக புதுச்சேரி டி.ஐ.ஜி.சத்திய சுந்தரம் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாங்கனித்திருவிழாவில் பக்தர்களுடன் ஒருவராக புதுச்சேரி டி.ஐ.ஜி,சத்தியசுந்தரம் மாங்கனிகளை பிடித்தார். மேலும் எஸ்.பி.லட்சுமி சௌஜன்யா, எஸ்.பி. சுப்ரமணியன் உள்ளிட்ட 400க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.