குரு பூர்ணிமா; கோவில்களில் சிறப்பு பூஜை.. புனித நீராடி பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2025 05:07
மத்திய பிரதேசம், குரு பூர்ணிமாவை முன்னிட்டு உஜ்ஜயினியில் உள்ள மஹாகாலேஷ்வர் ஜோதிர்லிங்க கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் பாஸ்ம ஆரத்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ வழிபாடு செய்தனர். குரு பூர்ணிமாவை முன்னிட்டு உத்தரகண்ட், ஹரித்வார் கங்கை நதி, உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜ் சங்கம் காட், மற்றும் அயோத்தி சரயு நதியில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிட்டனர். அயோத்தி ராமர் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.