மானாமதுரை; மானாமதுரை, இளையான்குடி கோயில்களில் ஆனி பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மானாமதுரை அருகே மிளகனுார் கிராமத்தில் உள்ள மீனாள் அம்மன் கோயிலில் ஆனி பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு திருமஞ்சனம், அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயில், இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் ஆனி பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.