கொடைக்கானல் ஸ்ரீ சாய் ஸ்ருதியில் குரு பூர்ணிமா விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூலை 2025 04:07
கொடைக்கானல்; கொடைக்கானல் ஏரி சாலையில் உள்ள ஸ்ரீ சாய் ஸ்ருதியில் குரு பூர்ணிமா விழா நடந்தது.குரு பூர்ணிமா விழா சத்ய சாயியுடன் தொடர்புடைய ஒரு புனித நாளாகும். ஆன்மிக குருமார்களை போற்று வதற்காகவும், அவர்களின் போதனைகளை நினைவு கூறுவதற்காக கொண்டாடப்படுகிறது. சத்ய சாய்பாபா குரு பூர்ணிமாவை ஒரு முக்கியமான ஆன்மிக விழாவாக கருதினார். மேலும் இந்நாளில் குருமார்களின் போதனைகளை நினைவு கூறவும், அவர்களை வணங்கவும் ஊக்குவித்து இவ்விழா கொண்டாடப்படுகிறது. இன்றைய விழாவில் பள்ளி குழந்தைகளின் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நகர சங்கீர்த்தனம், பஜனை மற்றும் இசை சமர்ப்பணங்கள் நடந்தது. விழாவையடுத்து அருட் பிரசாதமாக ஏழை எளியோருக்கு கம்பளி, அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தமிழ்நாடு ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள் செய்திருந்தன.