மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்; புத்தி சாதுரியத்தால் எதையும் சாதித்து வரும் உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் நன்மையான மாதமாகும். ஜூலை 30 வரை தைரிய வீரிய பராக்கிரம காரகனான செவ்வாய் சகாய ஸ்தானத்தில் ஞான மோட்சக் காரகனுடன் சஞ்சரிப்பதால் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றியாகும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். தடைபட்டு வந்த வேலைகள் நடந்தேறும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நினைத்ததை சாதிக்க முடியும். ஜென்ம குரு அலைச்சலை அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வார். குடும்பத்தில் நிம்மதியான நிலை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். பாக்கிய ஸ்தான ராகு உங்கள் அந்தஸ்தை உயர்த்துவார். நெருக்கடிகளில் இருந்து உங்களை விடுவிப்பார். பல வழியிலும் பணம் வர ஆரம்பிக்கும். வேண்டுதலை நிறைவேற்ற குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும் என்றாலும் இரண்டாம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் நிதானம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதால் நன்மை உண்டாகும்.
திருவாதிரை; உழைப்பின் வழியே உயர்வை அடைந்து வரும் உங்களுக்கு எப்போதும் அதிர்ஷ்ட வாய்ப்பு தானாக தேடி வரும். அந்நியரால் ஆதாயம் கிடைக்கும். பிறக்கும் ஆடி மாதம் உங்கள் வாழ்வில் முன்னேற்றமான மாதமாகும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி வக்கிரம் அடைந்தாலும், குரு பார்வையுடன் அங்கு ராகு சஞ்சரிப்பதால் உங்கள் செல்வாக்கு உயரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பணியில் இருந்த நெருக்கடி விலகும். வியாபாரம் வளர்ச்சி பெறும். தொழிலில் பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும். நீண்ட நாளாக தள்ளிப்போன குலதெய்வ வழிபாட்டை இந்த மாதத்தில் மேற்கொள்வீர்கள். விஐபிகள் ஆதரவால் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன், பொருள் சேர்க்கை இருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். மூன்றாம் இடம் கேது உங்கள் ஆற்றலை அதிகரிப்பார். ஒவ்வொரு வேலைக்கும் அடுத்தவர் தயவை எதிர்பார்த்திருந்த நிலை மாறி ஒவ்வொன்றையும் நீங்களே செய்து முடிப்பீர்கள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். புதன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருட்களும் புதிய வாகனமும் உங்கள் வீட்டை அலங்கரிக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தோரின் ஏக்கம் தீரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். விவசாயிகள் கவலை விலகும். வியாபாரம், தொழில் முன்னேற்றமடையும்.
சந்திராஷ்டமம்: ஆக. 8.
அதிர்ஷ்ட நாள்: ஜூலை 22, 23, 31. ஆக. 4, 5, 13, 14.
பரிகாரம்: காளிகாம்பாளை வழிபட சங்கடங்கள் நீங்கும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்: குரு அருளுடன் உயரிய குணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆடி மாதம் யோகமான மாதமாகும். ஜென்ம ராசிக்குள் குரு சஞ்சரித்தாலும் அவருடைய மூன்று பார்வைகளும் உங்களுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இதுநாள் வரை உங்கள் வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள், நெருக்கடிகள் விலக ஆரம்பிக்கும். நினைத்த வேலைகள் நினைத்தபடி நடக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம், போராட்டம் விலகும். சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும். கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி விலகும். நண்பர்களால் ஆதாயம் கூடும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். பாக்கிய ஸ்தானம் பலம் அடைவதால் இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதமாக இருக்கும். உங்கள் வேலைகளுக்கு பெரிய மனிதர்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். அரசியல்வாதிகள் செல்வாக்குடன் இருப்பர். சிலருக்கு புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைத்து வெளியூருக்கு செல்ல நேரும். நீண்ட நாளாக வாங்க நினைத்த இடத்தை வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரனின் சஞ்சாரத்தால் உங்கள் நிலையில் உயர்வு தோன்றும். கையில் பணம் புழங்கும். ஆடை, ஆபரணம், பொன், பொருள் சேரும். கணவன், மனைவிக்குள் இருந்த இடைவெளி விலகும். குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.