நாளை ஆடி அமாவாசை; மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2025 12:07
மேட்டுப்பாளையம்; நாளை 24ம் தேதி ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் உள்ள அனைத்து இந்து சமுதாய நந்தவனத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு பொதுமக்கள் சுமார் 25,000 பேர் வர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
கோயமுத்தூர் நீலகிரி திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் பொது மக்களுக்காக காலை முதல் மாலை வரை உணவுகள் மற்றும் குடிநீர் டி பி பி பி பிஸ்கட் உள்ளிட்டவை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாலை வரை அன்னதானம் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைவர் என் எஸ் வி ஆறுமுகம் துணைத் தலைவர் காளியப்ப கவுண்டர் செயலாளர் சுகுமார் பொருளாளர் குமார் துணை செயலாளர்கள் அனுமந்த ராவ் , உதயகுமார் இணை செயலாளர் பத்திரன் சட்ட ஆலோசகர் சாந்த மூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.