திருப்பூரின் காவல் தெய்வமான ஸ்ரீசெல்லாண்டிம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் திருவிழா, ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கிறது. அவ்வகையில், 19வது ஆண்டு குண்டம் திருவிழா துவங்கியுள்ள நிலையில், மகாமுனி பூஜையை தொடர்ந்து, நொய்யலில் இருந்து சக்தி அழைத்து, நேற்று கொடியேற்றம் நடந்தது. திருவிழாவில், இன்று (23ம் தேதி) பெருமாள் கோவிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல், வரும் 24ல், கோட்டை முனியப்பன் கோவிலில் இருந்து சூலம் எடுத்து வருதல், 25ல் டவுன் மாரியம்மன் கோவிலில் இருந்து பூவோடு ஊர்வலம், 27ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வரும், 29ம் தேதி காலை, குண்டம் திருவிழா, அக்னி அபிேஷகம், மாவிளக்கு மற்றும் பொங்கல் விழா, மாலையில் அம்மன் திருவீதியுலா நடக்கிறது. மஞ்சள்நீர் விழா, 30 ம் தேதியும், ஆக., 1ல் மறுபூஜையும் நடக்க உள்ளது.