ஆடி அமாவாசை வழிபாடு; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2025 11:07
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு தாணிப்பாறையில் பக்தர்கள் குவிந்தனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை வழிபாட்டிற்காக தாணிப்பாறையில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். இன்று காலை 10 மணி வரை முப்பதாயிரம் பக்தர்கள் மலையேறியுள்ளனர். காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் தொட்டிகள், மின்விளக்கு வசதிகள், அன்னதானம் வழங்குதல், பி.எஸ்.என்.எல். டவர் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.