திருவதிகை ரங்கநாத பெருமாள் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 11:07
பண்ருட்டி; திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி உற்சவர் பெருமாள் ஆண்டாளுடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டிநேற்று காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:00 மணிக்கு நித்யபடி பூஜை, 9:00 மணிக்கு மூலவர் பெருமாள், ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பெருமா ள், ஆண்டாளுக்கு திருக்கல்யாண உற்சவம், மாலை 4:00 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.