கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வளையல் வைத்து பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூலை 2025 11:07
கடலுார்; கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர விழாவில் ஏராளமான பெண்கள் அம்மனை வழிபாடு செய்தனர். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பாளுக்கு உகந்த தினம் என்பதால், அன்று சுமங்கலிப்பெண்கள் அம்பாளுக்கு தாலிச்சரடு, வளையல் வைத்து வழிபடுவது குடும்பத்துக்கு நல்லது என்பது ஐதீகம். இதனால் நேற்று சிவன் கோவில்களில் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி காலையில் மூலவருக்கும், அம்பாளுக்கும் சிறப்பு ஆராதனை நடந்தது. பின் பெரியநாயகி அம்பாளுக்கு சுமங்கலி பெண்கள் மஞ்சள், குங்குமத்துடன், தாலிச்சரடு, வளையல் வைத்து படைத்து வழிபட்டனர். அதேப் போன்று, குழந்தையில்லாத பெண்களும், குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். சுமங்கலி பெண்களுக்கு தாலிச்சரடு, வளையல் ஆகியவை வழங்கப்பட்டது.