ஆடி வெள்ளி; அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2025 10:08
கோவை; ஆடி மாதம் மூன்றாவது வெள்ளி கிழமையை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் தெரு எண் - 09 ல் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் லட்சுமி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சுமங்கலி பூஜை, சிறப்பு வழிபாடு ஆகியன நடைபெற்றன. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு சேலம் அய்யந்திருமாளிகை மாரியம்மன் கோவிலில் ஒரு லட்சம் வளையல் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர்.