கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதி சுந்தரர் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2025 05:08
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதி சுந்தரர் குருபூஜை விழா சிறப்பாக நடந்தது.
திருவெண்ணெய்நல்லுாரில் உள்ள 1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேவார பாடல் பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதி சுந்தரர் குருபூஜை விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு சுந்தரர் திருமண கோலத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு சிவபெருமான் அடிமை சாசனம் காட்டும் நிகழ்ச்சியும் 10:30 மணிக்கு சுந்தரர் தடுத்தாட்கொண்ட வரலாறு ஆன்மீக சொற்பொழிவு முற்பகல் 12:00 மணிக்கு கிருபாபுரீஸ்வரர் ரிஷபாரூடராக காட்சி கொடுத்து திருவீதி உலா நடந்தது.தொடர்ந்து இன்று பகல் 12:00 மணிக்கு 63 நாயன்மார்களுக்கு அபிஷேக ஆராதனைகளும் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு சுந்தரர் குரு பூஜையும், 1:00 மணிக்கு மகேஸ்வர பூஜை, மதியம் 1:30 மணிக்கு அருளாளர் சுந்தர் அருட்சபை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3:00 மணிக்கு சிவதீர்த்தத்திற்கு சுந்தரமூர்த்தி சுவாமி எழுந்தருளி முதலை வாயில் பிள்ளைத்தருவித்த ஐதீகமும் நடந்தது விழாவில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை அருளாளர் சுந்தரர் அருட்சபை மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.