பதிவு செய்த நாள்
02
ஆக
2025
03:08
திருப்பதி; திருப்பதி வந்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் திருப்பதி மகாபாதுகா மண்டபத்தில் காஞ்சி மடாதிபதிகளிடம் ஆசி பெற்றார்.
திருப்பதி மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வருகின்றனர். விழாவில் விஸ்வவாசு சாதுர்மாஸ்ய அக்னிஹோத்ர சதஸ் இன்று நிறைவு பெறுகிறது. இன்றைய பூஜையில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி காஞ்சி மடாதிபதிகளிடம் ஆசி பெற்றார். பூஜ்ய ஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிகள் மற்றும் சாதுர்மாஸ்ய விரதம் மகிமை குறித்து சுவாமிகள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 120 அக்னிஹோத்ரிகளுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து காஞ்சி மடாதிபதிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்க விழா நிறைவடைந்தது.