பழநியில் சித்தர் எழுதிய ஓலை சுவடிகளுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2025 11:08
பழநி; திண்டுக்கல் மாவட்டம், பழநி, புலிப்பாணி ஆசிரமத்தில் போகர் மற்றும் புலிப்பாணி சித்தர் எழுதிய ஓலை சுவடிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பழநி முருகன் கோவில் அடிவாரம், வடக்கு கிரி வீதி பகுதியில் புலிப்பாணி ஆசிரமம் உள்ளது. இங்கு, போகர் மற்றும் அவரது சீடர் புலிப்பாணி சித்தர் எழுதிய பழமையான ஓலைச்சுவடிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஆடி 18ல், ஆடிப்பெருக்கை முன்னிட்டு, ஓலைச்சுவடிகளுக்கு போகர் விக்கிரகத்துடன் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மலர் துாவி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில், சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பங்கேற்றார்.