நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால்,பழம்,பன்னீர், விபூதி,சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.மேலும் அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.அவர்களுக்கு நத்தம்- கோவில்பட்டி பாதயாத்திரை குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.