உத்திரமேரூர்; உத்திரமேரூரில் உள்ள கோவில்களில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, இன்று சுவாமி தரிசனம் செய்தார். உத்திரமேரூரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 1,000 ஆண்டுகளுக்கு முன், முதலாம் பராந்தக சோழன் ஆட்சி காலத்தைச் சேர்ந்த, குடவோலை தேர்தல் முறையை குறித்து விளக்கும் கல்வெட்டு உள்ளது. இந்நிலையில், பழமை வாய்ந்த இக்கோவிலில், தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, இன்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, கோவிலில் உள்ள குடவோலை தேர்தல் முறை கல்வெட்டுகள் குறித்து, கோவில் பணியாளர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் பாலசுப்பிரமணியர் கோவில்களிலும் சுவாமி தரிசனம் செய்தார்.