ஐந்து முழி அழகி ஆத்தாள் கோவில் திருவிழாவில் பழமை மாறாத படையல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2025 05:08
மேலூர்; வீரசூடாமணி பட்டியில் ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் திருவிழாவில் பக்தர்கள் ஆடு, சேவல்களை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் எட்டு நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். எட்டாம் நாள் முடிவான இன்று கச்சிராயன்பட்டி, வீரசூடாமணிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நேத்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்ற பக்தர்கள் 90 க்கும் மேற்பட்ட ஆடுகளும், 900 க்கும் மேற்பட்ட சேவல்களை காணிக்கையாக கொடுத்தனர். தவிர முடி காணிக்கை செலுத்தினர். கோயில் முன்பு பெரியகுளத்தில் ஆடு மற்றும் சேவல்கள் பலியிடப்பட்டது. அதன் பிறகு மண் பானையில் ஆடு, சேவல் கறிகளை வைத்து வேப்ப இலைகளை போட்டு உப்பு போடாமல் அவித்து அம்மனுக்கு படையலிட்டனர். அதற்கு முன்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட சர்க்கரையை இஸ்லாமியர் சக்கரை வழங்கும் பாறையில் வைத்து தொழுகை நடத்தி பின்னர் பக்தர்களுக்கு வழங்கினார். பிறகு காணிக்கை கொடுத்தவர்களுக்கு படையல் இடப்பட்ட பிரசாதம் பிரித்து கொடுக்கப்பட்டது. வேப்ப இலையை போட்டு சமைத்தாலும் அம்மனுக்கு படையல் இடுவதால் கசக்காது என்பது குறிப்பிடத்தக்கது.