மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ தீர்த்தவாரி நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஆக 2025 04:08
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் இன்று பட்டத்தரசி கிராம மண்டபடியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை வீரழகர் கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழா கடந்த மாதம் 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து தினம்தோறும் வீர அழகர் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளினார்.5ம் தேதி இரவு வீர அழகர், சவுந்தரவல்லி தாயார் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நேற்று வீர அழகர் சுந்தரபுரம் கடைவீதி மண்டகப்படிக்கு எழுந்தருளினார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இன்று தீர்த்த வாரி நிகழ்ச்சிக்காக வீர அழகர் வெள்ளைகுதிரை வாகனத்தில் பட்டத்தரசி கிராம மண்டகப்படிக்கு எழுந்தருளினார். மாலை 4:00 மணிக்கு தாரமங்கலம் ரோடு உள்ள அலங்கார குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த பின்னர் அபிஷேக ஆராதனைகளும்,சுவாமி வீதி உலாவும் அன்னதானமும் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டத்தரசி கிராம மக்கள் செய்திருந்தனர்.நாளை 11ம் தேதி உற்சவர் சாந்தியுடன் ஆடி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.