திருப்பதி காஞ்சி பீடத்தில் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமி ஜெயந்தி விழா; பாத பூஜை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2025 10:08
திருப்பதி; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதியான பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுடன் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் 91வது ஜெயந்தி மஹோத்ஸவம் திருப்பதி காஞ்சி பீடத்தில் நடைபெற்றது.
ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 91வது ஜெயந்தி விழாவையொட்டி, திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் வேதபாராயணம் நடந்தது. தொடர்ந்து பங்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. மாலை நடைபெற்ற வழிபாட்டில் காஞ்சி மடாதிபதிகள் பங்கேற்று பாத பூஜை செய்து வழிபட்டனர். 91 வது ஜெயந்தியை முன்னிட்டு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கி ஆசி வழங்கினார்.