அசாத்திய துணிச்சலும் சாதுரியமும் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு ஆவணி அதிர்ஷ்ட மாதமாகும். கேந்திர ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் நினைத்ததை நடத்தி முடிக்கக் கூடிய நிலை உண்டாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களைப் பார்ப்பதால் உங்கள் நீண்டநாள் கனவுகள் நனவாகும். அரசு வழி முயற்சிகள் ஆதாயமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். வாடகை வீட்டில் குடி இருந்தவர்கள் சொந்தமாக வீடு கட்டி குடியேறுவர். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களின் ஏக்கம் தீரும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். புதிய சொத்து சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். கூட்டுத்தொழில் ஆதாயம் தரும். கணவன், மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு விலகும். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேரும் நிலை உண்டாகும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். உங்களுக்கு இருந்த எதிர்ப்புகள், வழக்குகள் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உங்கள் திறமை வெளிப்படும். செப்.12 முதல் புதிய முயற்சிகள் லாபம் தரும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும் சேமிப்பு உயரும்.
வாழ்வின் அர்த்தம் தெரிந்து வாழ்ந்து வரும் உங்களுக்கு, அதிர்ஷ்ட வாய்ப்பு எப்போதும் தேடி வரும். ஆவணி மாதம் உங்கள் வாழ்வில் யோகமான மாதமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் யோகக்காரகர் நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். சமுதாயத்தில் செல்வாக்கை உயர்த்துவார். தெய்வ அருளும், பெரிய மனிதர்களின் உதவியும் இந்த நேரத்தில் உங்களுக்கு கிடைக்கும். தடைப்பட்ட வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும். மூன்றாம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியனும், கேதுவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவர். துணிச்சலும், தைரியமும் அதிகரிக்கும். கையில் எடுத்த வேலையை முடித்த பிறகு தான் மறுவேலையைத் தொடருவீர்கள். அந்த அளவிற்கு இந்த மாதம் உங்களுக்கு நன்மையான மாதமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். உங்களைப் பார்த்து ஏளனம் செய்தவர்கள் கூட தலை நிமிர்ந்து பார்க்கக் கூடிய நிலை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் செல்வாக்கு உயரும். தொண்டர்களின் ஆதரவு அதிகரிக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம் நடந்தேறும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை ஏற்படும். பிறரை நம்பி இருந்த நிலை இனி உங்களுக்கு இருக்காது, அந்த அளவிற்கு உங்களுடைய செல்வாக்கு இந்த மாதத்தில் உயரும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். வியாபாரம், தொழில் தொடங்க எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு வேலையின் மீதிருந்த பயம் போகும். விவசாயத்தில் ஏற்பட்ட தடை விலகும். உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.
சந்திராஷ்டமம்: செப்.5
அதிர்ஷ்ட நாள்: ஆக. 22, 23, 31. செப். 4, 13, 14
பரிகாரம் நரசிம்மரை வழிபட நன்மைகள் நடந்தேறும்.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்
தெளிந்த ஞானமும் பிறரை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ஆவணி மாதம் முன்னேற்றமான மாதமாகும். அதிர்ஷ்டக் காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை உருவாகும். ஜென்ம ராசிக்குள் சஞ்சரிக்கும் குரு உங்கள் நீண்ட கால கனவுகளை நனவாக்குவார். திருமண வயது வந்தும் வரன் அமையவில்லையே என மனம் வருந்திக் கொண்டு இருந்தவர்களுக்கு இந்த மாதத்தில் தகுதியான வரன் வரும். திருமணம் முடிந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். முன்னோரின் சொத்து கைக்கு வரும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். செப். 12 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வங்கியில் கேட்டிருந்த பணம் வரும். அரசு வழி முயற்சிகள் சாதகமாகும். புதிய இடம், வீடு வாங்கும் கனவு நனவாகும். தொழில் தொடங்குவதற்காக எதிர்பார்த்த அனுமதிகள் கிடைக்கும். தடைப்பட்டு வந்த செயல்கள் ஒவ்வொன்றாக நடந்தேறும். உங்கள் செல்வாக்கு உயரும். உறவினர்கள் வீடு தேடி வருவர். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வியாபாரம், தொழில் லாபம் தரும். பணியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். சிலர் வசிக்கும் இடத்தை விட்டு வசதியான வீட்டில் குடியேறும் நிலை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: செப்.6
அதிர்ஷ்ட நாள்: ஆக.21, 23, 30. செப். 3, 5, 12, 14
பரிகாரம் அனுமனை வழிபட சங்கடங்கள் விலகும்.
மேலும்
ஆவணி ராசி பலன் (17.8.2025 முதல் 16.9.2025 வரை) »