உயர்வான சிந்தனையுடன் எப்போதும் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் உங்களுக்கு, ஆவணி நன்மையான மாதமாகும். ஞானக்காரகன் குரு பகவான் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் அவருடைய பார்வைகளால், இதுவரை உங்களுக்கிருந்த சங்கடங்கள் விலகும். உடலில் ஏற்பட்ட பாதிப்புகள் குணமாகும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். இழுபறியாக இருந்த பிரச்னைகள், வழக்குகள் சாதகமாகும். ஆக. 21 முதல் ஜென்ம ராசிக்குள் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவில் ஏற்பட்ட தடைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும். அடைபடாமல் இருந்த கடன்களை அடைக்கும் நிலை உண்டாகும். மனதில் நிம்மதி நிலைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். உறவினர்களிடம் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கணவன், மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும் என்றாலும், தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சூரியன், கேது சஞ்சரிப்பதால் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மையை உண்டாக்கும். வரவு, செலவிலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். விவசாயிகளுக்கு இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும்.
நினைத்ததை சாதிப்பதில் எப்போதும் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, ஆவணி அதிர்ஷ்டமான மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் வக்கிரம் அடைந்திருப்பதுடன், அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவிற்கு விரய குருவின் பார்வை கிடைப்பதால் முடங்கிக் கிடந்த உங்கள் முயற்சிகள் இப்போது வெற்றி பெறும். எதை எடுத்தாலும் பிரச்னை, நெருக்கடி, அவமானம், தோல்வி என்றிருந்த நிலை இப்போது மாறும். திடீர் வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். உங்கள் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்னை, நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். தைரிய, வீரிய ஸ்தானத்தில் ரத்தக்காரகன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். குடும்பத்தில் உண்டான பிரச்னைகள் முடிவிற்கு வரும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்ப்பு, வழக்கு என்றிருந்த நிலையெல்லாம் மாறும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். எதிர்பாலினரால் ஆதாயம் கூடும். பெண்களுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். கணவரின் உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவுகள் குறையும். எதிர்பார்ப்பு நிறைவேறும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
சந்திராஷ்டமம்: செப்.7
அதிர்ஷ்ட நாள்: ஆக.17, 20, 26, 29. செப். 2, 8, 11
பரிகாரம் சிவபெருமானை வழிபட சங்கடங்கள் விலகும்.
ஆயில்யம்
புத்தி சாதுரியமும் தெளிவான சிந்தனையும் கொண்டு வாழ்க்கையில் வெற்றி அடைந்து வரும் உங்களுக்கு, ஆவணி முன்னேற்றமான மாதமாகும். செப். 12 வரை புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பொருளாதார நிலை உயரும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சேமிப்பு அதிகரிக்கும். அனைத்திலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். அதன் வழியாக உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சூரியன் கேது சஞ்சரித்தாலும் மூன்றாம் இட செவ்வாயால் நெருக்கடி யாவும் விலகும். துணிச்சலாக செயல்படுவீர்கள். எடுக்கும் முயற்சிகள் லாபமாகும். தேவையான நேரத்தில் சகோதரர்களின் உதவி கிடைக்கும். விலகி இருந்தவர்கள்கூட உங்கள் நலனில் அக்கறை கொள்வார்கள். தாயாரின் உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். திடீரென சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். இடம், வீடு, வாகனம் என்ற வகையில் சுபச்செலவு அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக திட்டமிடுவீர்கள். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும். சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாதம் முழுவதும் குடும்பத்தினரின் ஆலோசனைகளை ஏற்பதும், முக்கியமான விஷயங்களில் அவர்களிடம் கலந்து பேசி முடிவெடுப்பதும் நன்மையை உண்டாக்கும். விவசாயம் லாபம் தரும். வியாபாரம் வளர்ச்சி பெறும்.
சந்திராஷ்டமம்: செப்.8
அதிர்ஷ்ட நாள்: ஆக.20, 23, 29. செப். 2, 5, 11, 14
பரிகாரம் கோமதி அம்மனை வழிபட நன்மைகள் நடந்தேறும்.
மேலும்
ஆவணி ராசி பலன் (17.8.2025 முதல் 16.9.2025 வரை) »