பதிவு செய்த நாள்
14
ஆக
2025
03:08
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்
நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு ஆவணி முன்னேற்றமான மாதம். நான்காம் இடத்தில் கேந்திர பலத்துடன் ஆட்சியாக சஞ்சரிக்கும் சூரியன் உங்கள் முயற்சிகளை வெற்றியாக்குவார். செல்வாக்கு உயரும். உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற ஆதாயம் கிடைக்கும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தாய் வழி உறவுகள் ஆதரவால் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும். செய்து வரும் தொழில் முன்னேற்றம் அடையும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வம்பு வழக்குகள் சாதகமாகும். ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வரவு அதிகரிக்கும். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவால் பொருளாதார நிலை உயரும். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கடன்கள் அடைபடும் என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்தில் பிரச்னைகள் தலை காட்டும். ஆக.26 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 1, 2.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 19, 24, 28. செப். 6, 10, 15.
பரிகாரம்: அதிகாலையில் சூரியனை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
எந்த ஒன்றிலும் நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு ஆவணி பிரகாசமான மாதம். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 6, 8, 10 ம் இடங்களைப் பார்ப்பதால் உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். தொழிலில் ஏற்பட்ட போட்டிகள் பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். உங்களை எதிர்த்தவர்களே உங்களிடம் வந்து சமாதானம் பேசக் கூடிய நிலை உருவாகும். வம்பு வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். சிலருக்கு புதிய சொத்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னை, வழக்குகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் தடைப்பட்டிருந்த சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிலர் புதிய வீட்டில் பால் காய்ச்சுவர். பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். விவசாயிகள் வேளாண்மையில் முழுமையான கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வேலையின் காரணமாக வெளியூருக்கு சென்று வந்த நிலை மாறும். கணவர், பிள்ளைகளுடன் வசிக்கும் நிலை உருவாகும். சிறு வியாபாரிகளுக்கு ஆதாயம் கூடும்.
சந்திராஷ்டமம்: செப். 2, 3.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 20, 24, 29, செப். 6, 11, 15.
பரிகாரம்: காமாட்சி அம்மனை வழிபட எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
மிருகசீரிடம் 1, 2 ம் பாதம்
துணிச்சலையும் தைரியத்தையும் இயல்பாகவே கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைந்து வரும் உங்களுக்கு, ஆவணி நன்மையான மாதமாகும். தைரிய, வீரிய, பராக்கிரமக் காரகனான செவ்வாய் மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னைகள், வம்பு, வழக்குள் உருவாகலாம். பிள்ளைகளாலும் சில சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும் என்றாலும், குருபார்வை சத்ரு ஜெய ஸ்தானத்திற்கு கிடைப்பதால் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் உங்களுக்கு சாதகமாக மாறும். மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தேவைக்கேற்ற வருமானம் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். பொன், பொருள் சேர்க்கை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். குரு பகவானின் 8, 10ம் இட பார்வைகளால் புதிய முயற்சிகள் வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். உங்கள் செல்வாக்கு எல்லா இடத்திலும் உயரும். அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தலைமையின் ஆதரவு கிடைக்கும். வயதானவர்களுக்கு உடல் பாதிப்பு விலகும். சுறுசுறுப்பாக நடைபோடுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: செப். 3, 4.
அதிர்ஷ்ட நாள்: ஆக. 18, 24, 27, செப். 6, 9, 15.
பரிகாரம் முருகப்பெருமானை வழிபட வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.