நினைத்ததை சாதிப்பதில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, ஆவணி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ராசிக்குள் ராசிநாதன் சூரியன், ஞான மோட்சக்காரகன் கேது சஞ்சரிப்பதால் மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். குடும்பத்திலும் சிறு சிறு பிரச்னைகள் வந்து போகும் என்றாலும், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு நெருக்கடிகளில் இருந்து உங்களை காப்பார். வரவேண்டிய பணம் வரும். வியாபாரம், தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். லாபம் அதிகரிக்கும். மாதம் முழுவதும் அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் செப். 14 வரை செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. வார்த்தைகளில் நிதானம் தேவைப்படும். இல்லையெனில் தேவையற்ற சச்சரவுகள் உண்டாகும். வரவு செலவில் கவனமாக இருப்பதால் இழப்பைத் தவிர்க்க முடியும். பணம் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள் இந்த மாதம் முழுவதும் கவனமாக செயல்பட வேண்டும். சப்தம ஸ்தானத்திற்கு குருபார்வை உண்டாவதால் அந்நியரால் ஏற்பட்ட பிரச்னைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். பிள்ளைகளின் நலனில் அக்கறை அதிகரிக்கும். ஆக. 26 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.
சந்திராஷ்டமம்: செப்.8,9
அதிர்ஷ்ட நாள்: ஆக.19,25,28,செப்.1,7,10,16
பரிகாரம் பிள்ளையாரை வழிபட நெருக்கடி விலகும். நினைப்பது நடக்கும்.
பூரம்
எடுத்த முடிவில் உறுதியாக இருந்து நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் யோகமான மாதமாகும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் மாதம் முழுவதும் உங்களுக்கு நன்மைகளை வழங்குவார். பண வரவை அதிகரிப்பார். நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பார். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வைகள் 3, 5, 7 ம் இடங்களுக்கு உண்டாவதால் தைரியமுடன் செயல்படும் நிலை ஏற்படும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். இளம் வயதினருக்கு காதல் உண்டாகும். சிலருக்கு அது திருமணத்திலும் சென்று முடியும். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வெளிநாட்டு முயற்சிகள் சாதகமாகும் என்றாலும், மாதம் முழுவதும் வார்த்தைகளில் நிதானம் தேவை. குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். விவசாயிகள் விளைச்சலில் அக்கறை கொள்வதும், தொழிலாளர்கள் தம்முடன் பணியாற்றுபவர்களை அனுசரித்துச் செல்வதும் அவசியம்.
எடுத்த முடிவில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு, ஆவணி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ராசிநாதன் சூரியன் ராசிக்குள்ளாகவே சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு சங்கடங்கள் தோன்றும். சிலருக்கு தேவையற்ற டென்ஷன், படபடப்பு ஏற்படும். உஷ்ண நோய்கள் உங்களை ஓய்வெடுக்க வைக்கும். ராசிக்குள் சஞ்சரிக்கும் கேதுவும் மனதில் குழப்பத்தை ஏற்படுத்துவார். செயல்களில் தடுமாற்றத்தை உண்டாக்குவார் என்றாலும், லாப குருவால் எல்லாவற்றையும் சமாளித்திடும் ஆற்றல் உண்டாகும். அவருடைய பார்வைகள் உங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்கும். நினைத்த செயல்களை நடத்தி வைக்கும். குலதெய்வ அருளும் பெரியவர்களின் ஆதரவும் இந்த மாதத்தில் கிடைக்கும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். குழந்தை பாக்கியத்திற்காக நீண்ட நாளாக ஏங்கியவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன் வருமானத்தை வழங்குவார். மனதில் சந்தோஷத்தை உண்டாக்குவார். கணவன் மனைவிக்குள் இணக்கம் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கையும் புதிய இடம் வீடு வாகனம் வாங்க வைப்பார். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். பணியாளர்களுக்கு நெருக்கடிகள் விலகும். எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: செப்.10
அதிர்ஷ்ட நாள்: ஆக.19,28,செப்.1
பரிகாரம் ஏகாம்பரேஸ்வரரை வழிபட எண்ணிய எண்ணம் நிறைவேறும்.
மேலும்
ஆவணி ராசி பலன் (17.8.2025 முதல் 16.9.2025 வரை) »