வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றத்தை அடைந்து வரும் உங்களுக்கு, ஆவணி கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். விரய ஸ்தானமான 12ம் இடத்தில் சூரியன் சஞ்சரிப்பதுடன் ஞான மோட்சக்காரகனான கேதுவும் சஞ்சரிப்பதால் திடீர் செலவுகள் ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். யோசிக்காமல் அவசரப்பட்டு சில வேலைகளில் இறங்கி அதை முடிக்க முடியாமல் சங்கடப்படுவீர்கள். கையிருப்பு கரையும். சிலருக்கு மருத்துவ சிகிச்சைக்காக செலவுகள் ஏற்படும் என்றாலும், சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு உங்களைப் பாதுகாத்துக் கொண்டே இருப்பார். நோய் பாதிப்பில் இருந்து உங்களை விடுவிப்பார். எதிரி தொல்லை, பிரச்னை, வியாபாரத்தில் உண்டாகும் தடைகளை இல்லாமல் செய்வார். இழுபறியாக இந்த வழக்குகளில் வெற்றியை உண்டாக்குவார். ஆக.21 முதல் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். கேட்ட இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மாதத்தின் பிற்பகுதியில் சிலருக்கு புதிய சொத்து சேரும். அரசு பணியாளர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். பணியாளர்கள் வேலையில் கவனமாக இருப்பது அவசியம். வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் எடுத்துக் கொண்ட வேலைகளில் முழு ஈடுபாட்டோடு இருந்தால் வெற்றியடைய முடியும். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். கணவன் மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும்.
எந்த ஒன்றிலும் வெற்றியை நோக்கி நடை போடும் உங்களுக்கு, பிறக்கும் ஆவணி மாதம் முன்னேற்றம் தரும். ருண, ரோக, சத்ரு, ஜெய ஸ்தானத்தில் யோகக்காரகன் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள், போட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போகும். உடல் பாதிப்புகள் விலகும். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு 2, 4, 6 ம் இடங்களைப் பார்ப்பதால் குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் விலக ஆரம்பிக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கடன் தொல்லை விலகும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். உங்கள் செல்வாக்கு எல்லா வகையிலும் உயரும் என்றாலும், விரய ஸ்தானத்தில் சூரியனும் கேதுவும் சஞ்சரிப்பதால் செலவுகளில் கவனமாக இருப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. புதிய முதலீடுகள் செய்வதற்கு முன் நன்கு யோசித்து செய்வது நன்மை தரும். ஜென்ம ராசிக்குள் செவ்வாய் சஞ்சரிப்பதால் கவனக்குறைவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. திட்டமிட்டு செயல்படுவதால் இழப்பு ஏற்படாமல் சமாளித்துக் கொள்ள முடியும். ஆக.21 முதல் சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் நெருக்கடி நீங்கும். ஆக 26 வரை புதன் உங்கள் நிலையை உயர்த்துவார். எதிர்பார்ப்புகளை பூர்த்தியாக்குவார். புதிய இடம் வீடு வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். செப்.12 முதல் மீண்டும் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பொருளாதார நிலை உயரும். வியாபாரிகள், கலைஞர்களுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம்: செப்.11,12
அதிர்ஷ்ட நாள்: ஆக.20,23,29, செப்.2,5,14
பரிகாரம் பகவதி அம்மனை வழிபட நன்மைகள் நடந்தேறும்.
சித்திரை 1, 2 ம் பாதம்
தைரியம் கொண்டவராக இருந்தாலும் எந்த ஒன்றிலும் பின் விளைவு பற்றி யோசித்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, ஆவணி திட்டமிட்டு செயல்பட வேண்டிய மாதமாகும். தைரிய வீரிய பராக்கிரமக் காரகனான செவ்வாய் ராசிக்குள் சஞ்சரிப்பதால் அவசர முடிவுகள் எடுத்து அதன் வழியாக சங்கடத்திற்கு ஆளாகும் நிலை சிலருக்கு ஏற்படும். மாதம் முழுவதும் விரய ஸ்தானத்தில் சூரியனும் கேதுவும் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவு அதிகரிக்கும். புதிய முதலீடுகளும் எதிர்பார்த்த ஆதாயத்தை வழங்காமல் போகும் என்பதால், இந்த மாதம் முழுவதும் வழக்கமான வேலைகளில் மட்டும் ஈடுபடுவது நன்மை தரும். பிறருடைய ஆலோசனைகளை ஏற்பதும் அவர்கள் காட்டும் வழியில் செல்வதும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை. பத்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு வேலையில் சங்கடங்களை ஏற்படுத்துவார். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றத்தை உண்டாக்குவார். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு ஆதாயம் கிடைக்காமல் போகும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். என்றாலும் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவிற்கு குரு பார்வை உண்டாவதால் சங்கடங்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி இருக்கும். உடலில் ஏற்படும் பாதிப்பு விலகும். வழக்குகள் முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும். ஆக. 21 முதல் அதிர்ஷ்டக்காரன் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். கணவன், மனைவிக்குள் இணக்கம் உண்டாகும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். குடும்பத்தினர் ஆலோசனைகளை ஏற்பதால் நன்மை அதிகரிக்கும். பழைய கடன்கள் அடைபடும். சிலர் புதிய வாகனம் வாங்குவர். தாய்வழி உறவுகளின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். செப்.12 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் மாதக் கடைசியில் அதிர்ஷ்ட வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். சிறு வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர்.